குரோதி வருட தமிழ்ப்புத்தாண்டு ராசி பலன்கள்: ரிஷப ராசிக்காரர்களே.. வாய்ப்புகள் வீடு தேடி வரும்

குரோதி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி பிறக்கிறது. ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு தமிழ் புத்தாண்டு எப்படி இருக்கப்போகிறது. என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

Apr 10, 2024 - 17:22
குரோதி வருட தமிழ்ப்புத்தாண்டு ராசி பலன்கள்: ரிஷப ராசிக்காரர்களே.. வாய்ப்புகள் வீடு தேடி வரும்

பணியிடத்துல உங்க  திறமைகள் உரியவர்களால் உணரப்பட்டு, ஏற்றமும் மாற்றமும் ஏற்படும்க. எந்த சமயத்திலும் புலம்பலும், பொறுப்பு இன்மையும் மட்டும் கூடவே கூடாதுங்க. வீணான மன அழுத்தத்தைத் தவிருங்க. வேண்டாத சகவாசத்தையும் உதறுங்க. கையெழுத்திடும் சமயங்கள்ல கவனமா இருங்க. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் வரலாம்க. தவிர்க்காம ஏற்றுக்குங்க. சிலர் வெளியூர், வெளிநாடு செல்லவும் வாய்ப்பு உண்டுங்க.

இல்லத்துல இனிமை இடம்பிடிக்கணும்னா, நீங்க இன்சொல் பேச அடம் பிடிக்காம இருக்கணும்க. வாழ்க்கைத் துணையுடன் மனம்விட்டுப் பேசுங்க. வாரிசுகள் வாழ்க்கைல சுபகாரியம் சுலபமா கைகூடும்க. ஆடை, ஆபரணம் சேரும்க. விசேஷங்கள்ல ஆடம்பரத்துக்காக அதீத செலவுகள் செய்வதைத் தவிருங்க. சிலருக்கு குடும்பத்தைவிட்டுப் பிரிஞ்சு, பணி, படிப்பு காரணமாகச் செல்ல நேரலாம், அதை முறையான வழிகள்ல மேற்கொள்ளுங்க. எதிர்பாலரிடம் எல்லை வகுத்துப் பழகுங்க.

செய்யும் தொழில்ல சீரான வளர்ச்சி உருவாகும்க. அதுக்கு நேரடி கவனமும் நேர்மையும் முக்கியம்க. புதிய முதலீடுகளை ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யறது நல்லதுங்க. வெளிநாட்டு வர்த்தகத்துல உரிய நடைமுறைகளை முழுமையா கடைப்பிடிங்க. தரல்,பெறலை நேரடியா செய்யுங்க.

அரசு, அரசியல் சார்ந்தவங்களுக்கு ஆதரவு தொடரும்க. மேலிடத்தின் வார்த்தைகளைக் கனவிலும் மீற வேண்டாம்க. உடனிருக்கும் யாரையும் உதாசீனப்படுத்த வேண்டாம்க. சின்னச் சின்ன திட்டங்களாக இருந்தாலும் சின்சியரா கவனிச்சு செய்யறது அவசியம்க. யாரோட கட்டாயத்துக்காகவும் அவசரக் கையெழுத்து எதுவும் போடவேண்டாம்க.கோள்சொல்லும் நபர்களை விலக்கினாலே கோளாறுகள் நீங்கிடும்க.

மாணவர்கள் திட்டமிட்டுப் படிச்சா திறமைக்கு உரிய உயர்வுகளைப் பெறலாம்க. வெளிநாட்டுக் கல்வி வாய்ப்புகள், கல்விக் கடன்கள் சுலபமா கைகூடும்க.எல்லும் இடங்களின் சட்டதிட்டங்களை மதிச்சு நடங்க.

கலை, படைப்புத் துறையினருக்கு அரசு வழியில பாராட்டு, விருதுகள்கிடைக்க வாய்ப்பு உண்டுங்க. வாய்ப்புகள் வீடு தேடி வரும்போது, அதுல சிறியது, பெரியதுன்னு வித்தியாசம் பார்த்து ஒதுக்கறதும், வீணான ஜம்பத்துல விலக்கறதும் கூடாதுங்க.

இரவுநேரப் பயணத்தை இயன்றவரை தவிருங்க. விஷஜந்துகள், வளர்ப்புப் பிராணிகளிடமிருந்து விலகியே இருங்க.

ரத்த அழுத்த மாற்றம், சர்க்கரை, கால்சியம் குறைபாடு, பற்கள், முட்டுகள் பிரச்னைகளை உடனே கவனியுங்க. வருடம் முழுக்க, வாயுமகனை வணங்குங்க. வாழ்க்கை சிறக்கும்.

- யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow