குரோதி தமிழ் புத்தாண்டு ராசி பலன்: பதவியில் மாற்றம்.. மிதுன ராசிக்காரர்களுக்கு முன்னேற்றம்

குரோதி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி பிறக்கிறது. மிதுனம் ராசியில் பிறந்தவர்களுக்கு தமிழ் புத்தாண்டு எப்படி இருக்கப்போகிறது. என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

Apr 11, 2024 - 16:49
குரோதி தமிழ் புத்தாண்டு ராசி பலன்: பதவியில் மாற்றம்.. மிதுன ராசிக்காரர்களுக்கு முன்னேற்றம்

அலுவலகத்துல அனுகூலமான சூழல் உருவாகும்க. அதேசமயம், எதிர்பார்த்த இடமாற்றம், பொறுப்பு உயர்வுகள் கைகூடுவது கொஞ்சம் தாமதமாகலாம்க. பொறுப்பு உணர்வும் பொறுமையும் இருந்தா, எதிர்காலம் ஏற்றமானதாக இருக்கும்க. இதுவரைக்கும் வகித்த பதவியில சில மாற்றங்களும், இடமாற்றமும் ஏற்படலாம்க. அதைத் தயங்காம ஏற்றுக்கறது, நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்க.

இல்லத்துல நிம்மதி நிலவும்க. குடும்ப விஷயங்கள்ல மூன்றாம் நபர் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம்க. சுபகாரியங்கள்ல பெற்றவங்க, பெரியவங்க ஆலோசனைகளைக் கேளுங்க. விலை உயர்ந்த பொருட்களை பத்திரமா வைச்சுக்குங்க. குடும்ப விஷயத்தைப் பொது இடத்துல பேசுவதைத் தவிருங்க. வீடு, வாகனம் வாங்கும் சந்தர்ப்பம் அமையும்க. அதுக்கு, அனுபவம் மிக்கவங்க வழிகாட்டல் உதவும்க. கர்ப்பிணிகள் கூடுதல் கவனமா இருங்க.அறுபது வயதைக் கடந்தவங்க ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துக்கறது நல்லதுங்க.  

வர்த்தகம் வாணிபம் எதுவானாலும் அதுல செழிப்பான சூழல் உருவாகும்க. புதிய முதலீடுகள்ல அவசரம் வேண்டாம்க. வர்த்தகக் கடன்களைப் பெறுவதில் நேர்வழிதான் நல்லதுங்க. அயல்நாட்டு ஒப்பந்தங்களை பத்திரமா வைச்சுக்குங்க.

அரசியல், அரசுத் துறையினருக்கு அடக்கம் மிகமிக முக்கியம்க. பிறர் செய்யும் தவறுக்கு நீங்க  வீண் பழி ஏற்க வாய்ப்பு உண்டுங்க. உங்க நிழல்கிட்டேகூட ரகசியங்களைப் பகிர்ந்துக்காம இருக்கறது நல்லதுங்க. திடீர் பதவி வந்தா அது உங்க திறமையை பரிசோதிப்பதற்கான வாய்ப்பு என்பதை உணர்ந்து சிறப்பாக செயல்படுவது அவசியம்க.

மாணவர்களுக்கு மனம்போல மதிப்பெண் உயரும்க. அதுக்கு, முழு கவனமும் படிப்புலயே இருக்கறது முக்கியம்க மனதை ஒருநிலைப்படுத்தறதும், தினமும் அதிகாலையில எழுந்து படிக்கறதும் கல்வியில உங்க கனவுகளை நனவாக்கி, உயரச் செய்யும்க.

கலை, படைப்புத் துறையினருக்கு முயற்சிக்கு ஏற்ப வாய்ப்புகள் வரத்தொடங்கும்க. தற்பெருமை பேசறதும், தகுதியானது இல்லைன்னு தட்டிக்கழிக்கறதும் கூடாதுங்க.

பயணத்துல வேகம் வேண்டவே வேண்டாம்க. சாலைவிதிகளை அவசியம் கடைபிடிங்க. தொலை தூரம் செல்லும்போது உடைமைகள் பத்திரம்க.

உணவுப்பழக்க வழக்கத்துல நேரம்தவறாமை அவசியம்க. அலர்ஜி, காது,மூக்கு, தொண்டை உபாதைகள், ரத்தநாள அடைப்பு, ஒற்றைத் தலைவலி உபாதைகள் வரலாம்க. ஆண்டுமுழுக்க, பெருமாள், தாயாரைக் கும்பிடுங்க. உங்க வாழ்க்கை உன்னதமாகும்.

யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow