குரோதி வருட தமிழ்ப்புத்தாண்டு ராசி பலன்கள்: உலக அளவில் இந்தியாவின் மதிப்பு உயரும்.. புகழ் பரவும்

அறுபது தமிழ் ஆண்டுகள்ல இப்போது பிறக்க இருப்பது, குரோதி வருடம்க. இது அறுபது ஆண்டுகள்ல 38 வது வருடம்க. தற்போது (14.4.2024) இந்தத் தமிழ்ப்புத்தாண்டு பிறக்கும் சமயத்துல மேஷத்துல சூரியன், குரு; கன்னியில கேது; கும்பத்துல செவ்வாய், சனி; மீனத்துல புதன், சுக்ரன், ராகு என்ற கிரஹ அமைப்பு காணப்படுதுங்க. அதோட இந்த வருஷத்துல மேஷத்தில் இருந்து ரிஷபத்துக்கு குருபகவான் இடம்மாறும் பெயர்ச்சியும் நடக்க இருக்குதுங்க.

Apr 10, 2024 - 15:54
குரோதி வருட தமிழ்ப்புத்தாண்டு ராசி பலன்கள்: உலக அளவில் இந்தியாவின் மதிப்பு உயரும்.. புகழ் பரவும்


இந்த வருஷம் முழுக்க நிலவக்கூடிய கோள்சார நிலைகளின் அடிப்படையில் இந்த ஆண்டு நன்மை தீமைகளின் அளவு அவரவர் செயல்களால் கூடவோ குறையவோ கூடிய ஆண்டாக இருக்கும்க.

பொதுவாக இந்த வருஷத்துல தொடக்கத்துல உள்ள கிரக நிலைகளின்படி உலக அளவுல சில இடையூறுகளும் பாதிப்புகளும் வரக்கூடிய வாய்ப்புகள் உண்டுங்க. அது, இயற்கைப் பேரிடராகவோ அல்லது பகை நாடுகளின் தாக்குதலாகவோ,  தீவிரவாத அமைப்புகளின் தலைதூக்கலாகவோ இருக்கும்க.  அதேசமயம் தகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் சரியான நேரத்துல எடுக்கப்பட்டுவிடும் என்பதால பெரும்பாதிப்பு எதுவும் ஏற்படாதுங்க. கடல் சீற்றம், மலைச் சரிவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு, தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை சித்திரையிலேயே எடுத்துவிடுவது நல்லதுங்க.

 நெருப்பு, மின்சாரம், ரசாயன விபத்துகளாலும் இந்த ஆண்டில் பெரிய பெரிய தொழிற்சாலைகளில் சங்கடங்கள் வர வாய்ப்பு உண்டுங்க. அரசியலைப் பொருத்தவரை எதிர்பாராத சில மாற்றங்கள் ஏற்படும்க. பெரும் தலைவர்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்த வேண்டிய அவசியம் உருவாகும்க. பிரபலங்கள் சிலரது உடல் நலத்தில் பாதிப்புகள் வரக்கூடும்க. சிலருக்கு மருத்துவமனை வாசமும் தவிர்க்க முடியாததாகும்க. அயல் நாடுகளிடையே இந்தியாவின் மதிப்பு உயரும்க. விண்வெளி, ரசாயனம், மருத்துவத் துறைகள்ல புதிய கண்டுபிடிப்புகள் ஏற்படும்க. அதனாலும் உலக அளவுல பாரதத்தின் புகழ் பேசப்படும்க.

மக்களிடையே உதவும் மனப்பான்மையும், பக்தி மார்க்கத்தில் நாட்டமும் அதிகரிக்கும்க. இந்த வருஷம் முழுக்க எல்லாருக்கும் நல்லதே நடக்கவும், நாடும், வீடும் செழிக்கவும் விநாயகர், நரசிம்மர், அனுமன், துர்க்கை ஆகியோர்ல விருப்ப தெய்வத்தைக் கும்பிடறது நற்பலன் தரும்க.

குலதெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் மறக்காம கும்பிடுங்க. அவரவரால் ஒரே ஒரு செடியையோ மரத்தையோ வளர்க்க முடியுமானால் அவசியம் தவிர்க்காதீங்க.
எப்போதும் நல்லதே நினைங்க, நல்லதே செய்யுங்க. குரோதி வருஷம் முழுக்க உங்களுக்கு குறைவில்லா நன்மை கிட்டும்.நாள் எல்லாம் திருநாள் ஆகும்..

- யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow