நெல்லை அருகே: கோயில் ஊழியர் படுகொலை

உதவி போலீஸ் கமிஷனர் சம்பவ இடத்திற்கு சென்று கண்ணனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி விட்டு விசாரணையைத் தொடங்கினார்.

Dec 2, 2023 - 13:55
Dec 2, 2023 - 16:47
நெல்லை அருகே: கோயில் ஊழியர் படுகொலை

நெல்லை அருகே கோயில் ஊழியர் படுகொலை செய்யப்பட்டது குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நெல்லை டவுன் காவல்பிறை தெருவைச் சேர்ந்தவர் பழநி. கூலித் தொழிலாளி. இவரது மகன் கண்ணன்(34 வயது). பால் வியாபாரியான இவரிடம் ஏராளமான பசு மாடுகள் உள்ளன.

தினமும் காலையிலும் மாலையிலும் பால் கறந்து விற்பது இவரது தொழிலாக உள்ளது. இது தவிர பகுதி நேரமாக நெல்லையப்பர் கோயிலிலும் வேலை செய்து வந்தார். இங்குள்ள கோசாலையில் ஏகப்பட்ட மாடுகள் உள்ளன. இவற்றைப் பராமரிக்கும் தாற்காலிக ஊழியராக பணியாற்றினார் கண்ணன்.

கடந்த 1ம் தேதி இரவு கண்ணன் மாடத்தெருவில் நின்று கொண்டிருந்தார்.அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் கண்ணனைப் பார்த்ததும், வண்டியை நிறுத்தி விட்டு அவரிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளார்.

ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த கண்ணன் கொஞ்ச நேரத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.உதவி போலீஸ் கமிஷனர் சரவணகுமார் சம்பவ இடத்திற்கு சென்று கண்ணனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி விட்டு விசாரணையைத் தொடங்கினார்.

விசாரணையில் பணம் கொடுக்கல்,வாங்கல் தகராறில் கண்ணனுக்கும், அவரது நண்பர் ஒருவருக்கும் ஏற்பட்ட பிரச்சினையினாலேயே கொலை நடந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. தலைமறைவான நண்பரைப் பிடிக்க தனிப்படை போலீசார் நாகர்கோயில் விரைந்துள்ளனர்.
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow