ஓட்டு போடும் நாளில் சம்பளத்துடன் லீவு.. தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை உத்தரவு

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளில் பணியாளர்களுக்கு நிறுவனங்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

Mar 29, 2024 - 11:49
ஓட்டு போடும் நாளில் சம்பளத்துடன் லீவு.. தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை உத்தரவு

மக்களவைத் தேர்தல்  ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக வரும் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  தமிழகத்தில்  மக்களவைத் தேர்தல் நடைபெறும் நாளில் சம்பளத்துடன்  கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்  என தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19-ல் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள்,கடைகள், உள்ளிட்ட அரசு மற்றும் அனைத்து தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பிபிஓ (BPO) நிறுவனங்களும் தங்களது பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக புகார் அளிக்க மாநில மற்றும் மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகளை உருவாக்கி அதற்கான எண்களை பொதுமக்களுக்கு தெரியும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடபட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow