எதிர்பாராத நேரத்தில் பாய்ந்த ஷாக்.. சிறுவனுக்கு நேர்ந்த அசம்பாவிதம்
திருவள்ளூர் அருகே இசைக் கச்சேரியின் போது மழை காரணமாக ஸ்பீக்கரை தொட்டபோது மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
திருவள்ளூர் அருகே இசைக் கச்சேரியின் போது மழை காரணமாக ஸ்பீக்கரை தொட்டபோது மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
திருவள்ளூர் அடுத்த தண்டலம் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர். இவருக்கு 16 வயதில் ஒரு மகன் உள்ளார். இவர் எட்டாம் வகுப்பு வரை படித்து விட்டு பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். இந்த நிலையில் நேற்று இரவு திருவள்ளூர் அடுத்த அரண்வாயல் பகுதியில் இசை கச்சேரி நடந்து கொண்டிருக்கின்றது.
அந்த இசைக் கச்சேரியை பார்ப்பதற்காக அப்பகுதியை சேர்ந்த தமிழ்வாணன் என்பவருடன் அச்சிறுவன் சென்றுள்ளார். அப்போது அங்கு திடீரென மழை பெய்ததால், அனைவரும் அங்கிருந்து சென்றுள்ளனர். அப்போது அச்சிறுவன் தனது செல்போனை இசைக்கச்சேரி நடந்து கொண்டிருந்த இடத்தில் இருந்த ஸ்பீக்கர் மீது வைத்திருந்தார். அதை எடுப்பதற்காக அச்சிறுவன் சென்றார்.
அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால் அந்த ஸ்பீக்கர் மீது மழை தண்ணீர் ஊறிக் கொண்டிருந்தது. இதனால் அவர் அந்த ஸ்பீக்கரை தொட்ட போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டிருக்கிறார்.
இதை கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே தீனா பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக செவ்வாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?