பில்கேட்ஸ் உடன் ஒரு உரையாடல்.. பிரதமர் மோடி பகிர்ந்தது என்ன?
இன்றைய தலைமுறையினர், தொழில்நுட்பத்தில் மூழ்கியுள்ள நிலையில், தான் தொழில்நுட்பத்தால் ஈர்க்கப்படுவதாகவும், அதே சமயம், அதற்கு அடிமை இல்லை என்றும், மைக்ரோசாஃப்ட் CEO பில்கேட்ஸ் உடனான உரையாடலின்போது, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியும், தொழிலதிபர் பில்கேட்சும் உரையாடிய காட்சிகள் வெளியாகியுள்ளது. அதன்படி, உலகில் டிஜிட்டல் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் இந்தியாவில் அதனை அனுமதிக்கப் போவதில்லை எனவும் பில்கேட்சிடம் பிரதமர் தெரிவித்தார். கர்ப்பப்பை, வாய் புற்றுநோய்களுக்கான விஞ்ஞான ஆராய்ச்சிக்காக குறைந்த செலவில் தடுப்பூசிகளை உருவாக்க நிதி ஒதுக்கியுள்ளதாகவும் அவர் கூறினார். அப்போது பேசிய பில்கேட்ஸ், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புத் தேவையில் இந்தியா முன்னணியில் உள்ளதாகக் தெரிவித்தார். தொடர்ந்து பருவநிலை மாற்றம் தொடர்பாக வருத்தம் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, சோம்பேறித்தனங்களுக்கு மாற்றாக செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படக் கூடாது எனவும் குறிப்பிட்டார். G20 உச்சிமாநாட்டில் தனது உரைக்கு செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட்ட விதத்தையும் அவர் எடுத்துரைத்தார். நமோ செயலி மூலம் பில்கேட்சை செல்ஃபி எடுக்குமாறு வலியுறுத்திய பிரதமர், முக அடையாள தொழில்நுட்பம் மூலம் எவ்வாறு அது பயன்படும் என்பது தொடர்பாகவும் விளக்கமளித்தார். அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்குவதால், தொழில்நுட்பம் ஜனநாயகமாக்கப்படுவதை நம்புவதாகக் கூறினார்.
இதையடுத்து பில்கேட்சின் கேள்விக்கு பதிலளித்த பிரதமர் நரேந்திர மோடி, தொழில்நுட்பத்தால் ஈர்க்கப்பட்டவன் என்றபோதும் அதற்கு அடிமையில்லை என பதிலளித்தார். தான் ஒரு நிபுணர் அல்ல எனவும், ஆனால் தொழில்நுட்பத்தின் மீது குழந்தை போன்ற ஆர்வம் உள்ளது எனவும் அவர் கூறினார். விவசாயத்தில் பெண்கள் ட்ரோன்களை பயன்படுத்தும் திட்டத்தையும், நோயாளிகளுக்கு நீண்டதூர சிகிச்சையளிக்கும் முயற்சிகளையும் அவர் எடுத்துரைத்தார். தொடர்ந்து உரையாடலுக்குப் பின் ஊட்டசத்து புத்தகங்களை பரிசளிக்கவே, பதிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி 'Vocal for Local' கிஃப்ட் ஹேம்பர்களை வழங்கினார்.
What's Your Reaction?