மாசு படிந்த குடிநீர்... உளுந்தூர்பேட்டை அருகே 50-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம்...
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே புகைப்பட்டி கிராமத்தில் மாசு படிந்த குடிநீரை பருகியதால் 50-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள புகைப்பட்டி கிராமத்தில் கடந்த 3 நாட்களாக குடிநீரில் மாசு படிந்த குடிநீரைப் பொதுமக்கள் குடித்ததால் 50க்கும் மேற்பட்டவர்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 10 குழந்தைகள் உட்பட 36க்கும் மேற்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
மாசு படிந்த குடிநீர் குறித்து தகவல் அறிந்த சுகாதார துறையினர் புகைப்பட்டி கிராமத்தில் சிறப்பு முகாம் வசதியை ஏற்படுத்தி மேலும் எத்தனை பொது மக்களுக்கு வாந்தி மயக்கம், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் எதனால் பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்து அறிய குடிநீர் மற்றும் மலம் ஆகிய மாதிரிகள் எடுத்து சென்னை மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் குடிநீரைக் காய்ச்சி குடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் புகைப்படக் கிராமத்தில் தடிகாரம் கோவில் கிணற்றில் இருந்து மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் குடித்த மக்களுக்கு மட்டும் இந்த உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் அங்கு மர்ம நபர்கள் ஏதேனும் குடிநீரில் கலந்து உள்ளார்களா ? வேறு என்ன காரணம் என்பது குறித்து கிராம மக்கள் பீதியடைந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உயிரிழப்புக்கள் ஏற்படுவதற்கு முன்பாகவே சுகாதாரத்துறையினர் மருத்துவ பரிசோதனைகளை விரைவாக மேற்கொண்டு உண்மையை கண்டறிந்து உடனடி சிகிச்சை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
What's Your Reaction?