அதிமுக எங்கள் வசம் வரும்.. ஓட்டு போட்ட பின் ஓ.பன்னீர் செல்வம் உறுதி

Lok Sabha election 2024,tamil nadu,chennai,MK Stalin, மக்களவைத் தேர்தல் 2024, லோக்சபா தேர்தல் 2024, தமிழ்நாடு, சென்னை, மு.க. ஸ்டாலின்

Apr 19, 2024 - 09:50
அதிமுக எங்கள் வசம் வரும்.. ஓட்டு போட்ட பின் ஓ.பன்னீர் செல்வம்  உறுதி

மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னாள் முதல்வரும் ராமநாதபுரம் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியின் சுயேச்சை வேட்பாளருமான ஓ பன்னீர்செல்வம் அவரது சொந்த ஊரான பெரிய குளத்தில் அவரது வாக்கினை பதிவு செய்தார்

அவருடன் அவரது மகனும் எம்.பியுமான ஓ.பி. ரவீந்திரநாத் உடன் வந்து வாக்களித்தார். செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், எங்களுடைய வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிமுக எங்கள் வசமாகும் என்று கூறினார். 

பெரியகுளத்தில் வாக்கினை பதிவு செய்த ஓ பன்னீர்செல்வம் அங்கிருந்து இருந்து சாலை மார்க்கமாக புறப்பட்டு மீண்டும் அவர் போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதிக்கு செல்கிறார். 

ஈரோட்டில் கச்சேரி வீதியில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளியில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன், அவரது மனைவி வரலட்சுமி மற்றும் மகன் சஞ்சய் சம்பத்துடன் வந்து ஓட்டு போட்டு ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். 

செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், மக்கள் மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் கடும் வெயிலை பொருட்படுத்தாமல் வாக்குபதிவு செய்து தங்களது ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர். கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் வாக்குபதிவு சதவிகிதம் அதிகரிக்கும் என தெரிவித்தார்

விருதுநகர் மக்களவைத் தொகுதி திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைக்குட்பட்ட ஹார்விபட்டியில் மதுரை மக்களவை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு. வெங்கடேசன் ஓட்டு போட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சு.வெங்கடேசன்,  இன்றைய நாள் ஜனநாயக கடமையையும், ஜனநாயகத்தை காக்கிற கடமையும் ஆற்ற வேண்டிய நாள். எனவே வாக்காளப் பெருமக்கள் அனைவரும் இன்று வந்து வாக்களிக்க வேண்டும். நானும் எனது வாக்கை பதிவு செய்திருக்கிறேன். மகிழ்ச்சி என்று கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow