மக்களவைத் தேர்தல்.. தமிழ்நாட்டில் 9 மணிக்கு 12.55% வாக்குப்பதிவு.. கள்ளக்குறிச்சி டாப்.. சென்னை 8.59%

நாட்டின் 18வது லோக்சபா தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை முதலே மக்கள் வரிசையில் நின்று விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர். காலை 9 மணி வரைக்கும் 12.55 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.

Apr 19, 2024 - 10:17
மக்களவைத் தேர்தல்.. தமிழ்நாட்டில் 9 மணிக்கு 12.55%  வாக்குப்பதிவு.. கள்ளக்குறிச்சி டாப்.. சென்னை 8.59%

தமிழ்நாடு உட்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள மொத்தம் 102 தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் காலை 9 மணி வரை 12.55% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி தொகுதிகளில் 15% வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, காலை 9 மணி நிலவரப்படி 12.55% வாக்குகள் பதிவாகியுள்ளதாக கூறினார்.  

அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 15.10% குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 8.59% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.
போரூர், தருமபுரி உள்ளிட்ட நான்கு முதல் ஐந்து இடங்களில் சில வாக்கு பதிவு இயந்திரத்தில் பிரச்சனைகள் இருந்ததாகவும், அதுவும் மின்விநிலையாக கேபிள் உள்ளிட்ட  பிரச்சனைகள் உடனடியாக சரி செய்யப்பட்டது. தற்போதுவரை எங்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லை என தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow