இந்தியா வெற்றிதான்.. ஓட்டு போட்ட பின் முதல்வர் ஸ்டாலின் ஆருடம்
வாக்குரிமை பெற்று இருக்க கூடிய அனைவரும் தனது ஜனநாயக கடமையை ஆற்றிட வேண்டும் மறந்துவிடாமல், புறக்கணிக்காமல் அனைவரும் ஜனநாயக கடமையை ஆற்றிட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்
தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு இன்று மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சித்தரஞ்சன் சாலையில் உள்ள இல்லத்தில் இருந்து தனது மனைவியுடன் வாக்குச்சாவடிக்கு நடந்தே சென்று வரிசையில் நின்று வாக்களித்தார்.
பின்னர் செய்தியார்களிடம் பேசிய அவர், நான் ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டேன், நீங்கள் நினைப்பது போல் இந்தியா வெற்றி தான் என ஆருடம் கூறினார்.
வாக்குரிமை பெற்று இருக்க கூடிய அனைவரும் தனது ஜனநாயக கடமையை ஆற்றிட வேண்டும் மறந்துவிடாமல், புறக்கணிக்காமல் அனைவரும் ஜனநாயக கடமையை ஆற்றிட வேண்டுமென உங்கள் மூலமாக நான் வேண்டுகோள் விடுகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இதையடுத்து சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள வாக்குச்சாவடியில் தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி தனது வாக்கினை பதிவு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், நாட்டை, ஜனநாயகத்தை, அரசியலமைப்பை காப்பாற்ற வேண்டிய தேர்தல் என்ற தெளிவுடன் மக்கள் வாக்களிக்க வேண்டும் எனக்கூறினார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் தருமபுரி பாஜக வேட்பாளர் சவுமியா அன்புமணி தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களவைத் தேர்தல் நியாயமான முறையில் நடப்பதாகக் கூறினார்.
இதேபோல் சென்னை கொட்டிவாக்கம் வாக்குச்சாவடியில் விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார், சரத்குமார் ஆகியோர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராதிகா, நிச்சயம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனவும் ஜூன் 4ம் தேதி மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு எனவும் கூறினார்.
What's Your Reaction?