அன்பு மகளே ... X தளத்தில் இளையராஜா சோகம் ...

Jan 26, 2024 - 20:00
அன்பு மகளே ... X தளத்தில் இளையராஜா சோகம் ...

அன்பு மகளே ... இசையால் இதயங்களை உருக செய்த இசைஞானி , தனது அன்பு மகளை நினைவு கூறும் விதமாக தன்னுடயை x வலைத்தளத்தில் பவதாரிணி குழந்தை வயதில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார் ..

அவரின் இந்த பதிவை கண்டு ஆறுதல் சொல்லும் விதமாக , ரசிகர்கள் பலரும் தங்களது இரங்கல்களை அவருக்கு தெரிவித்து வருகின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு தான் , இளையராஜாவின் மனைவி ஜீவா அவர்கள் இந்த மண்ணை விட்டு பிரிந்து விண்ணிற்கு சென்றார் , அந்த வலியில் இருந்து இன்னும் மீளாத்துயரில் இருந்து வந்தவருக்கு , நுரையீரல் புற்றுநோய்க்காக சிகிச்சை எடுக்க இலங்கை சென்ற அன்பு மகள் பவதாரிணி உயிர் பிரிந்த நிலையில் திரும்பி வந்தது,  அவரை கடுமையான வேதனையை ஏற்படுத்தி உள்ளது ..

அவரின் உடல் இன்று வீட்டிற்கு வந்த சில மணி நேரங்களில் மகளின் அன்பு முகத்தை பார்த்து விட்டு கட்டுப்படுத்த முடியாத சோகத்துடன் அவர் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு தான் பலரின் மனதை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது ... 

அன்பு மகளே ... சென்று வா ... 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow