ஸ்டாலின் வழங்கிய விருது .. கொந்தளிக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ..

Jan 26, 2024 - 20:44
ஸ்டாலின் வழங்கிய விருது .. கொந்தளிக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ..
ஸ்டாலின் வழங்கிய விருது .. கொந்தளிக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ..
ஸ்டாலின் வழங்கிய விருது .. கொந்தளிக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ..

திமுக அரசு மீது பாஜக மாநில தலைவர் அண்ணமலை கடும் குற்றச்சாட்டு .... பிரிவினையை தூண்டும் நபருக்கு குடிஅரசு தினத்தில் கோட்டை அமீர் மதநல்லிணக்க விருது வழங்கியதற்கு எதிர்ப்பு ... 

 குடியரசு தின விழாவில் , சமூக ஆர்வலர்கள் , காவல்துறையினர் உள்ளிட்ட பல்வேறு பிரிவினர்களுக்கு விருது வழங்கி தமிழக அரசு சிறப்பிப்பது வழக்கம் .. அந்த வகையில் இந்த ஆண்டும் ஜனவரி 26 ஆம் நாள் அன்று சென்னை தலைமை செயலகத்தில் வைத்து சாதனை செய்தவர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு பிரிவின் கீழ் விருது வழங்கி கவரும் செய்தார் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ..

அந்த வகையில் அவர் வழங்கிய விருது ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது.. அதாவது சமூகத்தில் மதநல்லிணக்கத்திற்கு அடையாளமாக திகழும் நபர்களுக்கு வழங்கும் கோட்டை அமீர் விருது இந்த ஆண்டு பல்வேறு சர்ச்சைக்குள்ளான முஹம்மது ஜுபைர் எனும் நபருக்கு வழங்கியது பிரச்சனைகளுக்கு பிள்ளையார் சுழி போட்டு உள்ளது .. 

இது குறித்து  பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தனது x வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ள பதிவில் " 

தி.மு.க அரசு ஒவ்வொரு வாரமும், புதிய வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது ..
குடியரசு தினத்தன்று ஸ்டாலின் அரசு வழங்கிய கோட்டை அமீர் சமூக நல்லிணக்க விருதானது , சமூகத்தில் பிரிவினையும் முரண்பாட்டையும் உருவாக்கும் ஒருவருக்கு வழங்கியதன் மூலம் , கடந்த காலங்களில் இந்த விருதைப் பெற்ற அனைவரையும் அவமதித்தற்கு சமமாகும் ... 

சிலிண்டர் மூலம் நடந்த தற்கொலைப்படை தாக்குதலை கூட சிலிண்டர் விபத்து என்று அழைத்தவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்,  ஆச்சரியப்படுவதற்கு இதில் ஒன்றுமில்லை .. உண்மையைச் சரிபார்ப்பவர்கள் ( Fact - Checkers ) என்ற போர்வையில் உலவும் அரை குறை ஆசாமிகளை வளர்த்து விடும் செயலே ஆகும் ..

மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதில் திமுகவினரை மிஞ்ச யாரும் இல்லை ,இதை பற்றியெல்லாம் கவலையா படப்போகிறார்கள் என்று கடுமையாக சாடியுள்ளார் 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow