எம்.பிக்கள் சஸ்பெண்ட்டை திரும்ப பெற டிடிவி தினகரன் கோரிக்கை
நான் தேர்தலில் நிற்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.
நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை திரும்ப பெற வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “நாடாளுமன்றங்களில் இதுபோன்ற ஊடுருவல்களை தடுப்பது மத்திய அரசின் கடமை.எம்.பிக்களை சஸ்பென்ட் செய்யப்பட்டது சரியான நடைமுறை இல்லை. அதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் சரியான நிலைப்பாடாக இருக்கும்.
கூட்டணி குறித்து இந்த மாத இறுதிக்குள் அல்லது அடுத்த மாதத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும்.நான் தேர்தலில் நிற்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று எப்போதும் நான் கூறியது இல்லை.தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என கூறியுள்ளேன். கடைசிவரையில் நான் அமமுகவில் தான் இருப்பேன்” என்றார்.
What's Your Reaction?