39 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும் : ABP - C Voter கருத்துக்கணிப்பு !!
மக்களவைத் தேர்தல் தொடர்பான ABP - CVoter கருத்துக்கணிப்பில், தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும் பாஜக - அதிமுக கூட்டணிக் கட்சிகள் தோல்வியை சந்திக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் தொகுதிப்பங்கீடு பரபரப்பில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக - அதிமுக- பாஜக தங்களது கூட்டணிக் கட்சிகளுடன் களம் காண தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. திமுக கூட்டணியில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. அதிமுகவைப் பொறுத்தவரை தேமுதிக, புரட்சி பாரதம், புதிய தமிழகம், SDPI உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் உள்ளன. அதே நேரத்தில் பாஜக கூட்டணியில் அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ், ஓ.பி.எஸ் அணி, புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, தமமுக, சமக உள்ளிட்ட கட்சிகள் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளன.
இந்நிலையில் ABP - CVoter இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் தமிழ்நாட்டின் 39 தொகுதிகளையும் I.N.D.I.A கூட்டணி கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிபெறும் என கூறப்பட்டுள்ளது. மாநிலத்தின் அனைத்து 39 தொகுதிகளிலும் அதிமுக - பாஜக கூட்டணி தோல்வி அடையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் I.N.D.I.A கூட்டணி 54.7% வாக்குகளும், அதிமுக 27% வாக்குகளும், பாஜக தலைமையிலான NDA கூட்டணி 10.5% வாக்குகளும், பிற கட்சிகள் 6.8% வாக்குகளும் பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?