ஃப்ளோரிடா ஆகப் போகும் மதுரை..! இனி  திருச்சி தான் அடுத்த தரமணி..! பட்டிகளை சிட்டி ஆக்கும் பட்ஜெட்..!

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகள் ரூ.7,130 கோடி செலவில் செயல்படுத்தப்படும்

Feb 19, 2024 - 12:18
Feb 19, 2024 - 12:18
ஃப்ளோரிடா ஆகப் போகும் மதுரை..! இனி  திருச்சி தான் அடுத்த தரமணி..! பட்டிகளை சிட்டி ஆக்கும் பட்ஜெட்..!

மதுரை மற்றும் திருச்சியில் புதிய டைடல் பூங்காக்கங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். 

2024-2025-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார்.அதில், மதுரையில் 6.4 லட்சம் சதுர அடியில் ரூ.345 கோடியிலும், திருச்சியில் 6.3 லட்சம் சதுர அடியில் ரூ.350 கோடியிலும் புதிய டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் எனவும் தஞ்சை, சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் நியோ டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் எனவும், அதன் மூலம் 13,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள ரூ.5 கோடியும், சென்னை மாநகராட்சியை ஒட்டியுள்ள விரிவாக்கப் பகுதிகளுக்குத் தேவையான சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த ரூ.300 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடியும், சென்னையில் உள்ள கடற்கரைகளை மேம்படுத்த ரு.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அடையாறு ஆற்றின் இரு புறங்களிலும் 70 கி.மீட்டருக்கு கழிவுநீர் குழாய் அமைக்கப்படும் எனவும், மதுரை, நெல்லை, கோவை, திருச்சி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நதிகள் சீரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ள ஆய்வுக்காக திட்ட அறிக்கை ரூ.5 கோடி மதிப்பில் தயாரிக்கப்படும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார். 

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகள் ரூ.7,130 கோடி செலவில் செயல்படுத்தப்படும் எனவும், ரூ.20 கோடியில் 'கைவினைஞர்' மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார். ரூ.1,675 கோடியில் அலையாத்தி காடுகள், பவளப்பாறைகள், எண்ணூர் கழிமுகம் போன்றவை மேம்படுத்தப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow