ஆர்.கே.சுரேஷின் சகோதரர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

2024 நாடாளுமன்றத் தேர்தல் பணிகளைத் தமிழ்நாட்டில் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் கூட்டணி- தொகுதி உடன்பாடுகள் உள்ளிட்டவைகளே எட்டப்படாத நிலையில் தடாலடியாக வேட்பாளர்களை அறிவித்து வருகிறார் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.  

Feb 21, 2024 - 11:00
Feb 21, 2024 - 18:05
ஆர்.கே.சுரேஷின் சகோதரர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

2024 நாடாளுமன்றத் தேர்தல் பணிகளைத் தமிழ்நாட்டில் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் கூட்டணி- தொகுதி உடன்பாடுகள் உள்ளிட்டவைகளே எட்டப்படாத நிலையில் தடாலடியாக வேட்பாளர்களை அறிவித்து வருகிறார் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.  

50% பெண்களுக்கு, எந்த கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்ற கொள்கையுடன் தற்போது வரை 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளார். சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் நிரேஷா என்பவர் தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மருத்துவர் சிவக்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். 

குழந்தைகள் நல மருத்துவரான சிவக்குமார் நீண்ட காலமாகச் சீமானுடன் இணைந்து பயணித்து வருகிறார். மேலும் மதுரையில் ஹோட்டல்கள் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இவர் பிரபல சினிமா தயாரிப்பாளரான களஞ்சியத்தின் மகனும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு OBCபிரிவின் துணைத் தலைவராக உள்ள நடிகர் ஆர்.கே சுரேஷின் சகோதரர் ஆவார். திமுகவில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி 100%  அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு தான் வேட்பாளர் என்பது அனைவரும் அறிந்தே ஒன்றே. கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் கிட்டதட்ட 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் டி.ஆர்.பாலு வெற்றி பெற்றிருந்தார். 

மதுரவாயல், அம்பத்தூர், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளிடக்கியது இத்தொகுதி. சமீபத்தில் நடந்த திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் 39தொகுதிகளில் எந்த தொகுதியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தோல்வியடைகின்றனரோ அந்த மாவட்டச் செயலாளர் தயவு தாண்சனை இன்றி நீக்கப்படுவார் என்று தெரிவித்துள்ள நிலையில் தங்களது பதவியை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்று தற்போதே களப்பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் எதிர்க்கட்சியான அதிமுகவும் டி.ஆர்.பாலுவுக்குப் போட்டியாக வலுவான வேட்பாளரைக் களமிறக்கும். அதே சமயம் பாஜகவும் தனது வேட்பாளரைக் களமிறக்கும் பட்சத்தில் களம் சற்று பரபரப்பாகவே காணப்படும்

- மா.நிருபன் சக்கரவர்த்தி 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow