ஜனநாயகத்தை காத்தவர் மன்மோகன் சிங் - பிரதமர் நரேந்திரமோடி புகழாரம்

சக்கர நாற்காலியில் நாடாளுமன்றத்துக்கு வந்து ஜனநாயகத்தை காத்தவர் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

Feb 8, 2024 - 13:30
Feb 8, 2024 - 14:47
ஜனநாயகத்தை காத்தவர் மன்மோகன் சிங் - பிரதமர் நரேந்திரமோடி புகழாரம்

மாநிலங்களவை எம்.பிக்களில் 68 பேரின் பதவிக்காலம் பிப்ரவரி முதல் மே மாதத்துக்குள் முடிவடைகிறது. அவர்களுக்கு பிரியாவிடை கொடுக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களவையில் வாழ்த்து தெரிவித்து உரையாற்றினார். உரையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை வெகுவாக பாராட்டினார். 6 முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்து, அனைத்து எம்.பிக்களுக்கும் முன்னுதாரணமாக மன்மோகன் சிங் திகழ்ந்ததாக கூறினார்.

முக்கிய மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பின்போது உடல்நலம் குன்றியிருந்த நிலையிலும், சக்கர நாற்காலியில் வந்து தமது கடைமையை மன்மோகன்சிங் நிறைவேற்றியதாகவும் பிரதமர் தெரிவித்தார். 

ஒரு தலைவாராகவும் எதிர்கட்சித் தலைவராகவும் தனது விலைமதிப்பற்ற சிந்தனைகளால் மன்மோகன் சிங் ஆற்றிய பங்கு நினைவுகூரத்தக்கது எனவும், இத்தனை நாட்கள் அவையையும் நாட்டையும் வழிநடத்திய அவர் என்றென்றும் நினைவுகூரப்படுவார் எனவும் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow