திருவள்ளூரில் தலையில் தாக்கி வடமாநில தொழிலாளி கொடூரக் கொலை

கொலை குறித்து திருவள்ளூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Dec 26, 2023 - 15:59
Dec 26, 2023 - 17:27
திருவள்ளூரில் தலையில் தாக்கி வடமாநில தொழிலாளி கொடூரக் கொலை

திருவள்ளூர் அருகே வடமாநில தொழிலாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் பேருந்து நிலையம் எதிரில் பொன்னேரி பகுதியைச் சேர்ந்த அஜீஸ்அகமது  என்பவர் அல்நூர் என்ற பிரியாணி கடையை நடத்தி வருகிறார். இவரது கடையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மோபியாரா என்பவரது மகன் ராஜா(20)என்பவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு வேலைக்கு சேர்ந்து வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேபாள் நாட்டைச் சேர்ந்த ரோஹித் ஷர்மா என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்துள்ளார். அப்போது தான் கொண்டு வந்த உடமைகள், ஆவணங்கள் எல்லாம் தொலைந்து போனதாக கூறியுள்ளார். இதனையடுத்து கடை உரிமையாளர் அஜீஸ்அகமது ஹோஹித் ஷர்மாவை வேலைக்கு சேர்த்துள்ளார். இந்நிலையில் வேலை செய்பவர்கள் இரவு நேரத்தில் தங்குவதற்காக திருவள்ளூர் ஏரிக்கரையோரம் சிறிய வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் தங்க வைத்துள்ளார்.

அதேபோல் உரிமையாளர் அஜீஸ்அஹமது தங்குவதற்கும் சிறிய வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வேலை அதிகமாக இருக்கும் போது இரவு நேரத்தில் அங்கு தங்குவது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு பீகார் மாநில இளைஞர் உடல் நிலை சரியில்லாததால் உரிமையாளர் தங்கும் வீட்டில் படுத்துக் கொள்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். அதே போல் நேபாள் நாட்டைச் சேர்ந்த ரோஹித்ஷர்மா என்ற இளைஞரும் அங்கு சென்று படுத்துக்கொள்வதாக கூறிவிட்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு 11 மணி வரை ராஜா மற்றும் ரோஹீத்ஷர்மா ஆகிய இருவரும் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இன்று காலை ராஜாவும், ரோஹித்ஷர்மாவும் வேலைக்கு வராததால் உடன் வேலை செய்பவர்கள் உரிமையாளர் தங்கும் வீட்டிற்கு வந்த பார்த்த போது கதவு திறந்த நிலையில் இருந்துள்ளது.  உள்ளே சென்று பார்த்த போது ராஜா  கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பது தெரியவந்தது.

இதுகுறித்து திருவள்ளூர் தாலுக்கா போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் ஏஎஸ்பி விவேகானந்தா சுக்லா, இன்ஸ்பெக்டர் சங்கர சுப்பிரமணியம் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது ராஜாவின் உடல் அருகே பளு தூக்கும் கருவியால் தலையில் தாக்கியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து ராஜாவின் பிரேதத்தைக் கைப்பற்றி திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகினறனர்.இச்சம்பவம் திருவள்ளூர் ஏரிக்கரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow