”இனி எல்லாமே இப்படித்தான்”..இன்று முதல் மின்சார வாரியம் முழுவதுமாக டிஜிட்டலுக்கு மாற்றம்
தமிழ்நாடு மின்சார வாரியம் இன்று முதல் முழுவதுமாக டிஜிட்டல் முறைக்கு மாறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் இன்று முதல் முழுவதுமாக டிஜிட்டல் முறைக்கு மாறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் வாரியத்தின் கீழ் மின் பகிர்மான கழகம், மின் உற்பத்தி கழகம், பசுமை எரிசக்தி கழகம், மின் தொடரமைப்பு கழகம் ஆகிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.
மின்சார வாரியத்திற்கு மின் சாதன கொள்முதல் உள்ளிட்ட பணிகளுக்காக மதிப்பீடு தயாரிப்பது, ஒப்புதல் பெறுவது, அனுமதி அளிப்பது போன்றவற்றுக்கு, காகித கோப்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
காகித கோப்புகள் தயாரிப்பு செலவு, தாமதம் மற்றும் தொலைந்து போவது உள்ளிட்ட காரணங்களால் அதனை பயன்படுத்துவதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்காக கணினி வாயிலாக கோப்புகளை கையாளும் முறை கடந்த 2021ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று முதல் மின்சார வாரியம் முழுவதுமாக டிஜிட்டல் முறையில் கோப்புகள் கையாளப்பட இருப்பதாகவும், அதன் மூலம், கோப்புகள் கையாள்வதில் வெளிப்படைத்தன்மை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?