கேரளம் மாநிலம் தனியார் பள்ளியில் நள்ளிரவில் நடைபெற்ற பூஜையால் பரபரப்பு

பள்ளியில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சிறப்புப் பூஜைகள் குறித்து விசாரணை நடத்தப்படும்

Feb 15, 2024 - 06:32
Feb 15, 2024 - 06:41
கேரளம் மாநிலம் தனியார் பள்ளியில் நள்ளிரவில் நடைபெற்ற பூஜையால் பரபரப்பு

கேரளம் மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளியில் நள்ளிரவில் சிறப்புப் பூஜை நடத்தப்பட்டது ஏன்? என்று பள்ளிக்கல்வித்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

கேரளம் மாநிலம், கோழிக்கோடு நெடுமண்ணூரில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் மேலாளரின் மகன் ரூதிஷின் என்பவர் தலைமையில் பாஜகவினர் முன்னிலையில் கணபதி ஹோமம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதைக்கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பள்ளிக்குச் சென்று பூஜை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதை அறிந்து வந்த போலீசார் இருதரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விவகாரம் குறித்து கேரளம் கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி கூறுகையில், “பள்ளியில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சிறப்புப் பூஜைகள் குறித்து விசாரணை நடத்தப்படும். இதுதொடர்பாக விசாரணை நடத்தி விரைவாக அறிக்கை சமர்ப்பிக்க கல்வித்துறை இயக்குனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow