நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் கிடைப்பதில் சிக்கல்? - தேர்தல் ஆணையத்தை நாட முடிவு
கரும்பு விவசாயி சின்னம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் முறையிட உள்ளதாக கூறப்படுக்இறது
கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், நாம் தமிழர் கட்சிக்கு அதே சின்னம் கிடைப்பதில் எழுந்துள்ளது.
நாம் தமிழர் கட்சி மே 18ஆம் தேதி 2010ஆம் ஆண்டு சீமானால் தொடங்கப்பட்டது. நாம் தமிழர் கட்சியானது 2016 சட்டமன்ற தேர்தல், 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டுள்ளது. இந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. இருப்பினும் தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பல்வேறு இடங்களில் பரப்புரை மேற்கொண்டு வந்தார்.
கடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் சில வார்டுகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. கூட்டணி அமைப்பதில் திமுக, அதிமுக போன்ற பிரதான கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் எனச் சீமான் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களையும் அவர் அறிவித்து வருகிறார்.
இந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் பாரதிய பிரஜா ஐக்யதா கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதால், நாம் தமிழர் கட்சிக்கு அச்சின்னம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் முறையிடவுள்ளதாகவும், கரும்பு விவசாயி சின்னம் கிடைக்காத பட்சத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே நாம் தமிழர் கட்சி இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் ஒதுக்கப்பட்டது. பின்னர் வந்த தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது. நாம் தமிழர் கட்சியின் சின்னமாக அடையாளமாகியுள்ள கரும்பு விவசாயி சின்னத்தைப் பெறக் கட்சித் தலைமை ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
What's Your Reaction?