கல்வியில் தமிழ்நாட்டை சிங்கப்பூருடன் ஒப்பிட வேண்டும் - அமைச்சர் கோவி.செழியன்

கல்வி சிறந்த தமிழ்நாடு, உயர்கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற லட்சியத்துடன், நாம் கல்வியில் குஜராத்தையோ, பீகாரையோ ஒப்பீடு செய்யாமல் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுடன் ஒப்பீடு செய்யும் அளவிற்கு நாம் முன்னேற வேண்டும் என்பதே நமது தமிழக முதல்வரின் பேரசை என்றும் அது நிறைவேறிட நீங்களும், நாங்களும் இணைந்து பணியாற்றி நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்ப்போம், கல்விக்கு புகழ்சேர்ப்போம் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கூறியுள்ளார்.  

Oct 19, 2024 - 18:07
கல்வியில் தமிழ்நாட்டை சிங்கப்பூருடன் ஒப்பிட வேண்டும் - அமைச்சர் கோவி.செழியன்
kovi chezhiyan

 170 ஆண்டு கால பழமையான கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரி தென்னிந்தியாவின் கேம்பிரிட்ஜ் என போற்றப்படுகிறது, இக்கல்லூரியின் பட்டமேற்பு விழாவில் கல்லூரி முதல்வர் மாதவி வரவேற்புரை நிகழ்த்த, கல்லூரி பழைய மாணவரான, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் 2021 - 2022ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற 1,487 மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்று பட்டம் வழங்க வந்திருந்தார். நிகழ்ச்சிக்கு வர ஒன்றரை மணி நேரம் தாமதமான நிலையில் அதற்கு வருத்தம் தெரிவித்து சிறப்புரையாற்றினார். 

அமைச்சர் தனது சிறப்புரையில் “தேசியத் தரச் சான்றுப் பட்டியலில் இக்கல்லூரி 96வது இடத்தையும், மாநில அளவிலான தரச்சான்று வரிசையில் 5வது இடத்தையும் பெற்ற பெருமை கொண்டது. தஞ்சை மாவட்டத்திலேயே அதிக மாணவ மாணவியர்கள் (4700) கல்வி பயிலும் அதுவும் ஏழை எளிய நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கல்வி பயிலும் பல்கலைக்கழகமாக இக்கல்லூரி திகழ்கிறது. அரிய விழா இந்த பட்டமேற்புவிழா, இன்று பட்டம் பெறும் நீங்கள் அனைவரும் உயர்ந்த நிலைக்குச் செல்ல வேண்டும்.

 கல்வி சிறந்த தமிழ்நாடு, உயர்கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற லட்சியத்துடன், நாம் கல்வியில் குஜராத்தையோ, பீகாரையோ ஒப்பீடு செய்யாமல் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுடன் ஒப்பீடு செய்யும் அளவிற்கு நாம் முன்னேற வேண்டும் என்பதே நமது தமிழக முதல்வரின் பேராசை. அது நிறைவேறிட நீங்களும், நாங்களும் இணைந்து பணியாற்றி நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்ப்போம், கல்விக்கு புகழ்சேர்ப்போம்” என்று சிறப்புரை நிகழ்த்தினார். சிறப்புரை நிகழ்த்திய பின்னர் அமைச்சர் கோவி செழியன், 1,487 மாணவ மாணவியர்களுக்கு பட்டங்கள் வழங்கிப் பாராட்டினார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow