ஐபிஎல் போட்டியில் இருந்து காயம் காரணமாக வெளியேறிய ஷமி... கலக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ்..!

Feb 22, 2024 - 17:03
ஐபிஎல் போட்டியில் இருந்து காயம் காரணமாக வெளியேறிய ஷமி... கலக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ்..!

குஜராத் டைட்டன்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஷமி, கணுக்கால் காயம் காரணமாக ஐபிஎல் போட்டியில் இருந்து விலகியுள்ளார். அவர் அறுவை சிகிச்சைக்காக இங்கிலாந்து செல்லவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

33 வயதான ஷமி, நடப்பு இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக சேர்க்கப்படவில்லை. கடைசியாக உலகக்கோப்பை போட்டியில் விளையாடியிருந்த அவர் கணுக்கால் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்.

லண்டனில் ஜனவரி மாத இறுதியில் சிறப்பு இன்ஜெக்சன் ஷமி எடுத்துக் கொண்டார். 3 வாரங்களில் காயம் சரியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்ஜெக்சன் பலனளிக்கவில்லை என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கன. இதையடுத்து இடது கணுக்காலில் அறுவை சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக ஷமி இங்கிலாந்து செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையில் அபாரமாக பந்துவீசிய ஷமி, 24 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட் தொடருக்குள் ஷமி முழு உடற்தகுதியை எட்டிவிடுவார் என்று பிசிசிஐ வட்டாரம் நம்பிக்கை தெரிவிக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow