இனி வளர்ச்சியை நோக்கி.. MP DEVELOPERS நிறுவனத்தின் பிராண்ட் தூதராக சமந்தா நியமனம்!
MP DEVELOPERS நிறுவனத்தின் பிராண்ட் தூதராக சமந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு தரமான மற்றும் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்ட குடியிருப்புகளை உருவாக்கி வரும் MP Developers, தனது அடுத்தகட்ட வளர்ச்சிப் பயணத்தின் முக்கியமான அடையாளமாக, பிரபல நடிகை சமந்தா ரூத் பிரபுவை (Samantha Ruth Prabhu) நிறுவனத்தின் பிராண்ட் தூதராக (Brand ambassador) அதிகாரப்பூர்வமாக வரவேற்றுள்ளது.
குறிப்பாக, MP Developers நிறுவனமும், சமந்தா ரூத் பிரபுவும் இருவரும் சென்னையின் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது இந்த கூட்டணிக்கு மேலும் தனிச்சிறப்பையும் உணர்வுப்பூர்வமான இணைப்பையும் வழங்குகிறது.
“சென்னையின் வேர்களிலிருந்து உலகளாவிய வளர்ச்சியை நோக்கி – From Chennai Roots to Global Reach” என்ற MP Developers நிறுவனத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு, சமந்தாவின் இணைவு புதிய உத்வேகத்தை வழங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட MP Developers, கடந்த 14 ஆண்டுகளில் 250-க்கும் மேற்பட்ட திட்டங்களை நிறைவு செய்து, 3,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. மேலும், 1.5 மில்லியன்+ சதுர அடி பரப்பளவில் பல்வேறு குடியிருப்பு திட்டங்களை சென்னை மற்றும் கோயம்புத்தூர் - யிலும் தற்போது உருவாகி வருகின்றன.
வீடு என்பது வெறும் கட்டிடம் அல்ல; அது ஒரு குடும்பத்தின் எதிர்கால கனவுகளுக்கான அடித்தளம் என்ற நம்பிக்கையுடன், சிறந்த இருப்பிடம், திட்டமிடப்பட்ட வடிவமைப்பு, கட்டுமானத் தரம் மற்றும் வாடிக்கையாளர்களின் நீண்டகால மதிப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு MP Developers செயல்பட்டு வருகிறது.
“Growth Guarantee Homes” – வீட்டுடன் இணையும் எதிர்கால வளர்ச்சி
MP Developers அறிமுகப்படுத்தியுள்ள “Growth Guarantee Homes” என்ற அணுகுமுறை, வீடு வாங்குவதை ஒரு வாழ்க்கைத் தேவையாக மட்டுமல்லாமல், எதிர்காலத்தை உருவாக்கும் ஒரு புத்திசாலித்தனமான முடிவாகவும் பார்க்கிறது.
வளர்ச்சிக்கான அதிக வாய்ப்புள்ள பகுதிகள், சிறந்த இணைப்பு வசதிகள், திறமையான இடப் பயன்பாடு, உயர்ந்த UDS, அதிக FSI சாத்தியம் மற்றும் நடைமுறை சார்ந்த வீட்டு வடிவமைப்பு ஆகியவை MP Developers நிறுவனத்தின் முக்கிய தனித்துவ அம்சங்களாக உள்ளன.
இதுகுறித்து MP Developers நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. பிரவீன் மலிநெனி கூறுகையில்:
“MP Developers நிறுவனத்தின் 14 ஆண்டுகால பயணத்தில், இன்று ஒரு முக்கியமான புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறோம். 250-க்கும் மேற்பட்ட திட்டங்கள், 3,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் நம்பிக்கை என எங்கள் பயணம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது.
இந்த புதிய கூட்டணியின் மூலம் MP Developers நிறுவனத்தின் பிராண்ட் அடையாளம் மேலும் வலுப்பெறுவதோடு, அதன் Growth Guarantee Homes கருத்தையும் பரந்த அளவில் மக்களிடம் கொண்டு செல்ல நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சென்னையைத் தாண்டி கோயம்புத்தூர் உள்ளிட்ட புதிய சந்தைகளில் தனது குடியிருப்பு திட்டங்களை விரிவுபடுத்தி வரும் MP Developers, தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதைகளில் தனது அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் கொண்டு செல்லும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. NRI வாடிக்கையாளர்களுடனான தொடர்பு மூலம் இந்தியாவுக்கு அப்பால் உள்ள வாடிக்கையாளர்களையும் சென்றடையும் முயற்சிகளையும் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
“Built for Living. Guaranteed for Growth.” என்ற அணுகுமுறையுடன், தரமான வீடுகளை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், குடும்பங்களின் எதிர்கால வளர்ச்சிக்கும் மதிப்பு சேர்க்கும் வகையில் MP Developers தனது அடுத்தகட்ட பயணத்தைத் தொடங்கியுள்ளது.
What's Your Reaction?