முகூர்த்தக்கால் நட்டாச்சு.. காளைய ரெடி பண்ணுங்கப்பா..விராலிமலை ஜல்லிக்கட்டுக்கு ஏற்பாடுகள் தீவிரம்..

Apr 26, 2024 - 20:09
முகூர்த்தக்கால் நட்டாச்சு.. காளைய ரெடி பண்ணுங்கப்பா..விராலிமலை ஜல்லிக்கட்டுக்கு ஏற்பாடுகள் தீவிரம்..

பிரசித்தி பெற்ற விராலிமலை ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் முகூர்த்தக்கால் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது. 

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ஸ்ரீ மெய்க்கண்ணுடையாள் கோயில் உள்ளது. இந்தக் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2019-ஆம் ஆண்டில் அப்போதைய அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் தலைமையில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்பட்டது. இதில், 1,300 காளைகள் மற்றும் 424 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றது தமிழ்நாட்டையே திரும்பி பார்க்க வைத்தது. 

இந்த நிலையில், இந்தாண்டும் மெய்க் கண்ணுடையாள் கோயில்  பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு வரும் 30-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட உள்ளது. இதற்காக முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான சி.விஜயபாஸ்கர் தலைமையில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

தொடர்ந்து இன்றிலிருந்து ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக பேரிகார்டு மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளன. தமிழ்நாட்டிலேயே ஒரே ஊரில் 2 ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் பகுதியாக விராலிமலை திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow