நெல்லை மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்- அதிரடி காட்டிய அதிகாரிகள்

நிறுத்தப்பட்டிருந்த ஜெனரேட்டரை உடனடியாக அகற்ற வலியுறுத்ததோடு அவற்றிற்கு அபராத தொகையும் விதித்தனர்.

Jan 4, 2024 - 22:19
நெல்லை மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்- அதிரடி காட்டிய அதிகாரிகள்

நெல்லை மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற 24 மணி நேரம் கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்து நிலையில் மாநகராட்சி மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் தொடங்கியது.

 நெல்லை வண்ணாரப்பேட்டையில் இருந்து டவுன் ஆர்ச் வரை நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் இன்று அகற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து வருகிற 31ஆம் தேதி வரை நெல்லை மாநகர பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

நெல்லை மாநகர பகுதிகளில் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் கட்டிட வேலைகளில் உள்ள கழிவுகளை,போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாகவோ கழிவுநீர் கால்வாயில் கொட்ட கூடாது. அப்படி உள்ள ஆக்கிரமிப்புகளை பொதுமக்கள் தாங்களாகவே 24 மணி நேரத்திற்குள் அகற்றப்பட வேண்டும் அல்லது மாநகராட்சியால் அகற்றப்படும் இப்படி அகற்றப்படும் பொருட்கள் திரும்ப தரப்பட மாட்டாது.

 மேலும் ஆக்கிரப்பு அகற்றுவதற்கு அபராதமும் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர்  தாக்ரேசுபம் ஞானதேவ்ராவ் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.அதன் அடிப்படையில் இன்று நெல்லை மாநகர பகுதியான வண்ணாரப்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை பகுதிகளில் இருந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணியினை மாநகராட்சி அதிகாரிகள் காவல்துறை உதவியுடன் தொடங்கினர்.

 அவர்கள் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள் அனுமதி இன்றி செயல்பட்டு வந்த கடைகள், கடைகளில் உள்ள மேற்கூரைகள், விளம்பர பலகைகள் என அனைத்தையும் அகற்றினர்.மேலும் தனியார் நிறுவனத்திற்காக நிறுத்தப்பட்டிருந்த ஜெனரேட்டரை உடனடியாக அகற்ற வலியுறுத்ததோடு அவற்றிற்கு அபராத தொகையும் விதித்தனர். தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் வண்ணார்பேட்டை பகுதியில் இருந்து நெல்லையப்பர் நெடுஞ்சாலை, நெல்லை சந்திப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். இதனால் நெல்லை மாநகராட்சி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லையில் கனமழை வெள்ளத்தின் போது ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow