நாதக நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ சோதனை !
கோவையில் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி இரண்டு நபர்கள் வீட்டில் என் ஐ ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சேலத்தில் துப்பாக்கி தயாரித்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெறுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி இரண்டு நபர்கள் வீட்டில் என் ஐ ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சேலத்தில் துப்பாக்கி தயாரித்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெறுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகமெங்கும் தேசிய புலனாய்வு முகமையினர் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டு வந்தனர். சென்னை, திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை, கோவை, தென்காசி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய
புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே பகை வென்றான் கிராமத்தைச் சேர்ந்த Youtuber விஷ்ணு பிரதாப் என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றுது. அவர் 2020-ல் இருந்து youtube சேனலை நடத்தி வருகிறார். இதில் பிரபாகரன் குறித்த செய்திகளை தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக எழுந்த புகாரின் பேரில் இன்று அதிகாலை 5 மணிக்கு மதுரையில் இருந்து இளையான்குடி வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மூன்று பேர் விஷ்ணு பிரதாப் வீட்டில் சோதனை மேற்கொண்டு வந்தனர். அதனைத்தொடர்ந்து, எதற்காக சோதனை, எந்த அளவிற்கு தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்தார், யார் யாருடன் தொடர்பில் உள்ளார், எனவும் பண பரிவர்த்தனை எந்த அளவிற்கு நடந்துள்ளது என்பது குறித்தான கேள்விகளை தேசிய முகமை அதிகாரிகள் விஷ்ணு பிரதாப் முன் வைத்து சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே அவரது வீட்டில் இருந்து. பிரபாகரன் அட்டைப்படம் போட்ட 6 புத்தகங்கள் ஒரு செல்போனை கைப்பற்றியுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாம் தமிழர் கட்சியின் துணை செயற்பாட்டாளர் மற்றும் செய்தி தொடர்பாளர் சாட்டை துரைமுருகன் வீட்டிலும் NIA அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அங்கு சுமார் மூன்று மணி நேரத்துக்கு மேலாக விசாரணை மேற்கொண்டதில் சாட்டையின், மனைவி மாதராசியிடமும் விசாரணை நடத்தினர். அதில் பல ஆவணங்கள் கைப்பற்றபட்டதாகவும், தெரிவித்தனர். மேலும் சாட்டை துரைமுருகனும் மற்றும் அவரது மனைவி மாதராசியும் பிப்ரவரி 7-ம் தேதி ஆஜராக வேண்டும் என NIA அதிகாரிகள் சம்மனை கொடுத்திவிட்டு சென்றனர் என தகவல் வெளியாகி உள்ளது.
What's Your Reaction?