அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் புதிய தமிழகம்.. தொகுதிகள் பின்னர் அறிவிக்கப்படும்...

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக - புதிய தமிழகம் இடையேயான கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். 

Mar 5, 2024 - 13:52
அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் புதிய தமிழகம்.. தொகுதிகள் பின்னர் அறிவிக்கப்படும்...

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், மாநில, தேசியக் கட்சிகள் கூட்டணி வைப்பது குறித்து பலகட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. தேசியக் கட்சிகள், மாநிலங்களில் இருக்கக் கூடிய பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும், மாநிலக் கட்சிகள் சிறு சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், புதிய தமிழக கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, இன்று(05.03.2024) அதிமுக தொகுதி பங்கீட்டுக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் இந்தப் பேச்சுவார்த்தையில் உடனிருந்தனர். இந்த சந்திப்பில் அதிமுக - புதிய தமிழகம் இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், தொகுதிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow