"கடவுள் துகள்" கண்டறிந்த விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் காலமானார்
'கடவுள் துகள்' எனப்படும் போசான் துகளை கண்டறிந்தவரும், நோபல் பரிசு பெற்ற இங்கிலாந்து விஞ்ஞானியுமான பீட்டர் வேர் ஹிக்ஸ் காலமானார். அவருக்கு வயது 94.
பிரிட்டனை சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானியான பீட்டர் வேர் ஹிக்ஸ் , இயற்பியல் துறையில் தனது கண்டுபிடிப்புகள் மூலம் உலகப் புகழ் அடைந்தார்.
ஹிக்ஸ் போசான் துகள் என்று அழைக்கப்படும் Mass Giving Paricle மற்றும் அதுதொடர்பான ஆராய்ச்சிகளுக்காக எங்லெர்ட்டுடன் இணைந்து 2013 ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
கடவுள் துகள்' என்று அழைக்கப்படும் ஹிக்ஸ் போசான் துகள் கண்டுபிடிப்பில் முக்கியப் பங்கு வகித்த பீட்டர் ஹிக்ஸ் தனது 94வது வயதில் காலமானதாக எடின்பர்க் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக எடின்பர்க் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில், "ஏப்ரல் 8 ஆம் தேதி தனது இல்லத்தில் பீட்டர் ஹிக்ஸ் காலமானார். லேசான உடல் நலக்கோளாறு ஏற்பட்டு இருந்த நிலையில், அவரது உயிர் பிரிந்தது.
ஸ்காட்லாந்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் கிட்டதட்ட 50 ஆண்டுகளாக அவர் பேராசிரியாக இருந்தார். அவர் மிகச்சிறந்த ஆசிரியராகவும் ஆலோசகராகவும் விளங்கினார். பல இளைய விஞ்ஞானிகளுக்கு இன்ஸ்பிரேஷனாகவும் விளங்கியவர் என்று கூறப்பட்டுள்ளது.
பீட்டர் வேர் ஹிக்ஸ் தனது கண்டுபிடிப்புகளுக்காக பல்வேறு பதக்கங்களை பெற்றிருக்கிறார். ஹியூஸ் பதக்கம், ரூதர்ஃபோர்டு பதக்கம், டிராக் பதக்கம், வுல்ஃப் பரிசு, ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமியின் பதக்கம், எடின்பர்க் ராயல் சொசைட்டி பதக்கம், காப்ளே பதக்கம் உட்பட ஏராளமான பரிசுகள், விருதுகள், கவுரவ டாக்டர் பட்டங்களைப் பெற்றுள்ளார்.
What's Your Reaction?