ஜாபர் சாதிக் வீட்டில் நடந்த ED சோதனை நிறைவு...
இந்தியாவையே அதிரவைத்த போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் சிக்கியுள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை நிறைவடைந்தது.
ரூ.2000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பயன்படுத்தப்படும் வேதிப்பொருள், டெல்லியில் கடந்த பிப்ரவரி 15ம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் தமிழ் சினிமா தயாரிப்பாளரும் முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக், கடந்த மாதம் 9ஆம் தேதி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்கள் மற்றும் அவருக்கு நெருக்கமான நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
சென்னை பெரம்பூரில் யுகேஷ், முகேஷ், லலித்குமார் என்ற கெமிக்கல் நிறுவனம் நடத்தி வரும் சகோதரர்களிடம் நடத்தப்பட்டு வந்த சோதனை நிறைவடைந்தது. இதேபோல் கொடுங்கையூரில் சினிமா துறையைச் சேர்ந்த ரகு என்பவர் வீட்டில் நடந்த சோதன நேற்று நள்ளிரவு முடிவடைந்தது.
தேனாம்பேட்டையில் ஃபசீரா டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் நிறுவனம், அடையாறில் புகாரி ஹோட்டல் உரிமையாளர் சி.எம்.புஹாரி வீட்டில் நடந்து வந்த சோதனையும் நள்ளிரவு நிறைவடைந்தது.
இதுமட்டுமின்றி கீழ்பாக்கத்தில் உள்ள ஷேக் முகமது நிசார் என்பவர் வீட்டிலும், தி.நகரில் உள்ள அமீர் வீடு மற்றும் சேத்துபட்டில் உள்ள அமீரின் உறவினர்கள் வீட்டிலும் நடந்து வந்த சோதனையும் நிறைவடைந்துள்ளது.
What's Your Reaction?