தமிழ்நாடு அரசு திடீர் அறிவிப்பு.. விடுமுறையில் ஊருக்குச் செல்வோர் குஷி..

Apr 25, 2024 - 21:40
தமிழ்நாடு அரசு திடீர் அறிவிப்பு.. விடுமுறையில் ஊருக்குச் செல்வோர் குஷி..

முகூர்த்த தினம் மற்றும் வாரி இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

ஏப்ரல் 26 முகூர்த்த தினம் மற்றும் ஏப்ரல் 27, 28 ஆகியவை வார இறுதி நாட்கள் என்பதால், சென்னையில் இருந்து இதர பகுதிகளுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து,  நாளை (26-04-2024) திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 280 பேருந்துகள் இயக்கப்படும். ஏப்ரல் 27-ல் கூடுதலாக 355 பேருந்துகளும் மற்றும் கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு ஏப்ரல் 26 மற்றும் 27-ல் கூடுதலாக 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 200 சிறப்பு பேருந்துகளம் இயக்கப்படும். மேலும், ஏப்ரல் 28-ம் தேதி பயணிகள், சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக, தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சுமார் 9,000 பேர் முன்பதிவு செய்துள்ள நிலையில், எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், தொலைதூர பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, www.tnstc.in அல்லது Mobile App மூலம் முன்பதிவு செய்யுமாறு அரசு போக்குவரத்துக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow