பிழைகளுடன் தமிழில் காவல்துறை வைத்த அறிவிப்பு பேனர்
எழுத்துப்பிழையோடு உள்ள பிளக்ஸ் பேனரை அகற்றிவிட்டு புதிய பிளக்ஸ் பேனரை வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்
காவல்துறை சார்பில் வைக்கப்பட்ட அறிவிப்பு பேனர் எழுத்துப்பிழையுடன் காணப்படுவதால் என்னடா இது தஞ்சையில் தமிழுக்கு வந்த சோதனை என்று தமிழ் ஆர்வலர்கள் புலம்பி வருகின்றனர்.
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருசக்கர வாகன திருட்டு அதிகமாக நடைபெற்று வருகிறது. இதனைத் தடுக்க காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், காவல்துறை சார்பாக எச்சரிக்கை பிளக்ஸ் பேனர் ஒன்று வைக்கப்பட்டது. அதில் ஆங்காங்கே இருசக்கர வாகனங்கள் வைக்க கூடாது. கட்டணமில்லா வாகன நிறுத்துமிடத்தில் வைக்க வேண்டும் என அதில் பிழையாக வாக்கியங்கள் இடம் பெற்றுள்ளன
காவல் துறையால் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனரில் 3 இடத்தில் எழுத்துப் பிழை இருந்தது சுட்டிக் காட்டப்பட்டபோது அதை மாற்றி வேறு பிளக்ஸ் பேனர் வைக்காமல் அதிலேயே திருத்தம் செய்யப்பட்டது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த தமிழ் ஆர்வலர்கள் இது என்னடா தஞ்சையில் தமிழுக்கு வந்த சோதனை என தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும், எழுத்துப்பிழையோடு உள்ள பிளக்ஸ் பேனரை அகற்றிவிட்டு புதிய பிளக்ஸ் பேனரை வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
What's Your Reaction?