அமைச்சருடனான கரும்பு விவசாயிகள் பேச்சுவார்த்தை தோல்வி

விவசாயிகள் ஆலை முன்பு 353வது நாளாக  தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமைச்சருடனான கரும்பு விவசாயிகள் பேச்சுவார்த்தை தோல்வி

திருஆருரன்‌ சக்கரை ஆலை  கரும்பு விவசாயிகளுடன் தமிழக அமைச்சர் முன்னெடுத்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே திருமண்டகுடியில் திருஆருரான் சர்க்கரை ஆலை செயல்பட்டு வந்தது.இந்த சர்க்கரை ஆலையை நிர்வாகம் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத்தொகையான சுமார் 128 கோடி ரூபாயை வழங்கவில்லை.  

2018 ஆம் ஆண்டு இந்த ஆலை நிர்வாகம் ஆலையை நிரந்தரமாக மூடியது. மேலும் ஆலை நிர்வாகம், விவசாயிகளின் பெயரில் மோசடியாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சுமார் 300 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது. ஆலை நிர்வாகம் மூடப்பட்டதால் கடனை திருப்பிக்  கட்ட சொல்லி வங்கி நிர்வாகம் விவசாயிகளுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பிரச்சினையும் எழுந்ததால், அவர்களால் வேறு எந்த கடனும் வாங்க முடியாத சூழல் உருவானது.

இந் நிலையில் மூடப்பட்ட திருஆருரான் சக்கரை ஆலையை கால்ஸ் என்ற நிறுவனம் வாங்கி தற்போது திறப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் ஆலை முன்பு 353வது நாளாக  தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை அடுத்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை அழித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆலையின் புதிய நிர்வாகம் முதலில் நிலுவைத்தொகையில் 75% அளிக்கும் என்றார். இதனை ஏற்றுக் கொள்ளாத கரும்பு விவசாயிகள் முழு தொகையும் கொடுக்கப்பட வேண்டும் எனவும்,சிபில் ஸ்கோரை சரி செய்ய வேண்டும்.அதுவரை போராட்டம் தொடரும் எனவும் அறிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow