நர்சிங் மாணவி கடத்தலா?- போலீஸ் விசாரணை

காதலுடன் சென்ற நர்சிங் மாணவியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நர்சிங் மாணவி கடத்தலா?- போலீஸ் விசாரணை

சங்கரன்கோயில் நர்சிங் மாணவி கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோயில் அருகே உள்ள ஆண்டார்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சாத்தையா.இவரது மகள் கவுரி( 20). 12ம் வகுப்பு முடித்துவிட்டு தென்காசியில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார்.

கடந்த 16ம் தேதி சாத்தையா தனது மகள் கவுரியை தென்காசி நர்சிங் கல்லூரியில் கொண்டு வந்து விட்டிருக்கிறார். அப்போது கல்லூரி வாசலில் நின்று கொண்டிருந்த ஒருவர் சட்டென கவுரியின் கையைப் பிடித்து இழுத்து ஒரு காரில் ஏற்றிக்கொண்டு பறந்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியான சாத்தையா சட்டென தென்காசி காவல்நிலைத்திற்கு சென்று நடந்ததைக் கூறியிருக்கிறார்.

உடனடியாக இன்ஸ்பெக்டர் பாலமுருகன் எல்லா ஸ்டேசன்களையும் அலெர்ட் செய்திருக்கிறார். குறிப்பாக புளியங்குடி காவல் நிலையத்திற்கு போனில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். எனவே புளியங்குடி போலீசார் சிந்தாமணி செக்போஸ்டில் வாகன சோதனை நடத்தியிருக்கிறார்கள். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று போலீசை பார்த்ததும் அங்கேயே யு டர்ன் அடித்திருக்கிறது.

உடனே போலீசார் அந்தக்காரை விரட்டியிருக்கிறார்கள்.இரு வளைவில் கொஞ்ச நேரம் அந்த கார் நின்று விட்டு மறுபடியும் பறந்திருக்கிறது. சுமார் 5 கி.மீட்டர் தூரம் காரை சேஸ் செய்து பிடித்திருக்கிறது போலீஸ்.ஆனால், அதில் யாருமில்லை. டிரைவர் ராஜா மட்டும் இருந்திருக்கிறார்.

காரில் வந்தவர்கள்  எங்கே என்று கேட்டதற்கு அவர்கள் இறங்கி போய் விட்டார்கள் என்று பதிலளித்திருக்கிறார். பின்னர் டிரைவர் ராஜாவிடம் விசாரிக்கும் போதுதான் கவுரி, இதே ஊரைச் சேர்ந்த மனோஜ்குமாரை காதலிக்கிறார். இந்தக் காதலுக்கு கவுரியின் தந்தை சாத்தையா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எனவே மனோஜ்குமார் கவுரியை அழைத்துக்கொண்டு ஓடியிருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தலைமறைவான காதலர்களை போலீஸ் வலை வீசி தேடி வருகின்றனர்.
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow