பாஜகவில் இருப்பது வெறும் 3% வாக்காளர்களே!..DONT CARE சொன்ன எஸ்.பி.வேலுமணி...

Feb 28, 2024 - 13:11
பாஜகவில் இருப்பது வெறும் 3% வாக்காளர்களே!..DONT CARE சொன்ன எஸ்.பி.வேலுமணி...

வெறும் 3 முதல் 4 சதவீதம் வாக்காளர்கள் உள்ள பாஜகவில் நாம் சேர போகிறோம் என்று  கூறினால் DONT CARE என விட்டுச் செல்லுங்கள் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் சிங்கை கோவிந்தராஜனின் 25-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு பேசினார். அப்போது, மேலும் யாரெல்லாம் கட்சிக்கு விசுவாசமாக  இருக்கிறார்களோ?  அவர்களுக்கு எல்லாம் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது என்றார். மேலும் வெறும் 3 முதல் 4 சதவீதம் வாக்காளர்கள் உள்ள பாஜகவில் அதிமுக சேர போவதாக கூறப்படுவதற்கு நாம் பதில் கூற வேண்டுமா? என கேள்வி எழுப்பினார். 

அதிமுக தமிழ்நாட்டில் 35 முதல் 40 சதவீத வாக்காளர்கள் உள்ள கட்சி என்றும், இது போன்ற கருத்திற்கு எல்லாம் பதில் கூற வேண்டியதில்லை எனவும் DONT CARE என விட்டுச் செல்ல வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். பல்வேறு வளர்ச்சி பணிகளை  செய்துள்ள நமக்கு, காலரை தூக்கி சென்று நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகளை கேட்கும் தகுதி உள்ளது என்றும், அவர்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை என்றும் கூறிய எஸ்.பி.வேலுமணி, எடப்பாடியாருக்கு அனைத்து தொகுதிகளிலும் வெற்றியை தேடி தருவது தான் லட்சியம் என தெரிவித்தார். 

மேலும் படிக்க : 

https://kumudam.com/Bail-plea-rejected-for-the-second-time..-Senthilbalaji-in-trouble

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow