குரோதி தமிழ் புத்தாண்டு ராசி பலன்: கும்ப ராசிக்காரர்களே.. பொறுமை அவசியம்.. அலட்சியம் ஆபத்தாகும்

குரோதி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி பிறக்கிறது. கும்பம் ராசியில் பிறந்தவர்களுக்கு தமிழ் புத்தாண்டு எப்படி இருக்கப்போகிறது. என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

Apr 13, 2024 - 16:00
குரோதி தமிழ் புத்தாண்டு ராசி பலன்: கும்ப ராசிக்காரர்களே.. பொறுமை அவசியம்.. அலட்சியம் ஆபத்தாகும்

பொறுமையைக் கையாண்டால், பெருமையைப் பெறக்கூடிய வருடம்க. அலுவலகத்துல உங்க திறமைக்கு உரிய ஏற்றம் கிடைக்கும்க. அதேசமயம் பிறர் குறைகள் எதையும் பெரிதுபடுத்திப் பேசாமல் இருப்பது முக்கியம்க. இடமாற்றம், பதவி, ஊதிய உயர்வுகளுக்கு முயற்சிகளுக்கு ஏற்ப பலன் கிடைக்கும்க. வேண்டாத சிலரோட வழிகாட்டல்கள் உங்களை திசை திருப்பிடலாம்;  எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசியுங்க. எந்தப் பணியிலும் அவசரமும் அலட்சியமும் அறவே தவிருங்க.

குடும்பத்துல சுமுகமான சூழல் நிலவும்க. கசந்த வார்த்தைகளைத் தவிர்த்தா, வசந்தகாலமாக இருக்கும்க. தம்பதியர் இடையே மனம்விட்டுப் பேசுங்க. வரவை திட்டமிட்டு செலவிடுங்க. வீண் ஆடம்பரம் தவிருங்க. குலதெய்வ வழிபாட்டை முறையாகச் செய்யுங்க. முறையான மருத்துவ சிகிச்சை எடுத்துகிட்டா குழந்தைபாக்யம் கைகூடி வரும்க.

செய்யும் தொழில்ல சலிக்காத உழைப்பு இருந்தா லாபம் உயரும்க. பரம்பரை வர்த்தகத்துல புதிய முதலீட்டை யோசித்து செய்யுங்க. சுயதொழில் செய்யும் வாய்ப்பு சிலருக்கு வரலாம்க. அயல்நாட்டு வர்த்தகத்துல சீரான போக்கு நிலவும்க.

 அரசியல், அரசு சார்ந்தவங்க  திடீர் உயர்வுகளைப் பெற வாய்ப்பு உண்டுங்க. சிலருக்கு பணி சார்ந்த பயணங்கள் அதிகரிச்சாலும் அதனால ஆதாயமும் அதிகரிக்கும்க.உடன் இருந்தே உபத்திரவம் செய்யும் நபர்களை அடையாளம் கண்டு உடனடியா விலக்குங்க.

மாணவர்களுக்கு திறமைக்கு ஏற்ப உயர்வுகள் வரக்கூடிய காலகட்டம்க. பெற்றோர் பெரியோர் வழிகாட்டலுக்கு முக்கியத்துவம் குடுங்க. விடியற்காலைல எழுந்து படிங்க, வெற்றி நிச்சயமாகும்.

கலை, படைப்புத்துறையினருக்கு வளர்ச்சியும் மலர்ச்சியும் ஏற்படும்க. நம்பிக்கை துளிர்க்கும்போது முயற்சிகள்ல சோம்பல் கூடாதுங்க.

பயணங்களால ஆதாயம் உண்டுங்க. வழிப்பாதையில உள்ள மகான்கள் திருத்தலத்தை தரிசிக்கறது நன்மை தரும்க.

 நரம்புகள், படபடப்பு, ரத்த அழுத்த மாற்றம், மன அழுத்த உபாதைகளை உடனே கவனியுங்க. தினமும் சிறிது நேரமாவது உடற்பயிற்சி, மனப்பயிற்சி செய்யுங்க.

வருடம் முழுக்க சிவன் பார்வதியை ஆராதியுங்க. வாழ்க்கை சிறக்கும்.

 யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow