எல்லாமே இனிமே நல்லாதான் நடக்கும்! அபுதாபியில் கோவில்..கத்தாரில் மீட்டிங்.. நாட்டுக்கு திரும்பிய பிரதமர் மோடி..!

Feb 15, 2024 - 21:59
எல்லாமே இனிமே நல்லாதான் நடக்கும்! அபுதாபியில் கோவில்..கத்தாரில் மீட்டிங்.. நாட்டுக்கு திரும்பிய பிரதமர் மோடி..!

அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திரமோடி, அபுதாபி மற்றும் கத்தாரில் நடைபெற்ற பல்வேறு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் தனது பயணத்தை முடித்துக்கொண்டு  நாடு திரும்பினார். 

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அரசு முறை பயணமான சென்ற பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். முன்னாதாக அபுதாபியில் கடந்த புதன்கிழமை அன்று 900 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட முதல் இந்து கோயிலான சுவாமி நாரயணன் கோயிலை திறந்து வைத்து சிறப்பு பூஜையிலும் பங்கேற்றார்.  

தொடர்ந்து கத்தார் தலைநகர் தோஹா சென்றைடைந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில்,  அந்நாட்டு அதிபர் ஷேக் தமிம் பின் ஹமத் அல் தானியை சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்பில் இந்தியா - கத்தார் உறவுகளை மேம்படுத்துவது குறித்து விவாதித்தாக தனது எக்ஸ்தளத்தில் பதிவிட்ட பிரதமர், இரு தரப்பு உறவு மேலும் வலுப்பெற்றுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். 

அதேபோல் கத்தாரின் நிதி அமைச்சரை சந்தித்து பேசிய பிரதமர், இருதரப்பு நிதி, வர்த்தகம்,  முதலீடு, எரிசக்தி என பல்வேறு துறைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தியதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் தனது இரண்டு நாள் பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow