PM Modi : இந்தியாவின் முதல் under water metro! தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி...
7 லட்சம் பேர் பயணிக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேற்குவங்க மாநிலம் மகாகரன் - எஸ்பளனேடு மெட்ரோ நிலையத்தில் இருந்து நீருக்கடியில் செல்லும் இந்தியாவின் முதல் under water metro சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
மேற்குவங்க மாநிலத்திற்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் சேவைகளை இன்று (மார்ச் 06) காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். மொத்தம் ரூ.15,400 கோடி செலவில் தொடங்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் சேவைகள் இன்று தொடக்கப்பட்டன. பின்னர், ஹவுரா மைதானத்தையும், எஸ்பளனேடு பகுதியையும் இணைக்கும் கொல்கத்தாவின் கிழக்கு மேற்கு மெட்ரோ சேவையை எஸ்பளனேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
கொல்கத்தாவின் முக்கிய நதியான ஹூக்ளி நதிக்கு அடியில் செல்லும் இந்த மெட்ரோ பாதை, நீருக்கடியில் செல்லும் முதல் மெட்ரோ ரயில் சேவை என்பது குறிப்பிடத்தக்கது. நீர் மட்டத்தில் இருந்து சுமார் 16 அடி ஆழத்தில் மெட்ரோ ரயில் தடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில், நாளொன்றுக்கு 7 லட்சம் பேர் பயணிக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த சேவை மூலம் கொல்கத்தாவின் பரபரப்பான இரு பகுதிகள் இணைக்கப்படுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியைப் பார்வையிட மக்கள் பலர் ஆர்வத்துடன் வருகை தந்தனர். ரயிலை தொடங்கி வைத்ததற்குப் பின் அதில் பயணித்த பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் மேற்குவங்க ஆளுநர் சி.வி ஆனந்த போஸ், பாஜக எம்.எல்.ஏ சுவேந்து அதிகாரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
What's Your Reaction?