பாஜகவின் தேர்தல் சூழ்ச்சி; ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது - எதிர்க்கட்சிகள் ரியாக்‌ஷன்

Feb 20, 2024 - 20:50
Feb 20, 2024 - 20:53
பாஜகவின் தேர்தல் சூழ்ச்சி; ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது - எதிர்க்கட்சிகள் ரியாக்‌ஷன்

சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு நடைபெற்றது உறுதி செய்யப்பட்டதையடுத்து உச்சநீதிமன்றத்திற்கு உள்ள உச்சபட்ச அதிகார பிரிவு 142-ஐ பயன்படுத்தி தேர்தல் அதிகாரி குற்றவாளி என அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

மேலும் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த அதிகாரத்தை பயன்படுத்துவதாக தலைமை நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.  உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் பல்வேறு கருத்துகளை முன் வைத்துள்ளனர்.

இதுகுறித்து காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், பாஜகவின் தேர்தல் சூழ்ச்சிகளில் இருந்து ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

ராகுல் காந்தி கூறுகையில், பாஜகவின் ஜனநாயக படுகொலை, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் வெளிவந்துள்ளதாக காங்கிரஸ் முன்னாள்  தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், சண்டிகர் மேயர் தேர்தல் தொடர்பான தீர்ப்புக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பின் மூலம் பாஜகவின் இரட்டை வேடம் அம்பலமாகி உள்ளது என்றும் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow