கர்நாடக முதலவர் மீதான நில முறைகேடு விவகாரம்: இன்று வெளியாகயிருக்கிறது தீர்ப்பு
நில முறைகேடு விவகாரத்தில் ஆளுநர் உத்தரவை ரத்து செய்ய கோரி கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தொடர்ந்த வழக்கில் அம்மாநில உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
நில முறைகேடு விவகாரத்தில் ஆளுநர் உத்தரவை ரத்து செய்ய கோரி கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தொடர்ந்த வழக்கில் அம்மாநில உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
கர்நாடக மாநிலம் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் சார்பில் மைசூருவில் முதலமைச்சர் சித்தராமையா மனைவி பார்வதிக்கு முந்தைய பா.ஜனதா ஆட்சியில் கடந்த 2021-ம் ஆண்டு 14 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டன. இதில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இது தொடர்பாக முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி வழங்குமாறு கோரி சமூக ஆர்வலர்கள் ஆளுநருக்கு மனு கொடுத்தனர். இதற்கு ஆளுநர் அனுமதி வழங்கிய நிலையில், ஆளுநரின் உத்தரவை ரத்து செய்யக்கோரி முதலமைச்சர் சித்தராமையா கடந்த மாதம் 19-ந் தேதி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது விரிவான விசாரணை நடைபெற்றது.
கடைசியாக இந்த வழக்கின் விசாரணை கடந்த 12-ந் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் சித்தராமையா தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு இன்று நண்பகல் 12 மணிக்கு அளிக்கப்படும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
What's Your Reaction?