ஆசைக்காட்டி மோசடி... நல்ல வேலைனு கூறி ரஷ்ய ராணுவத்தில் சேர்ப்பு.. மூளையாக இருந்த தமிழர் கைது

May 8, 2024 - 10:43
ஆசைக்காட்டி மோசடி... நல்ல வேலைனு கூறி ரஷ்ய ராணுவத்தில் சேர்ப்பு.. மூளையாக இருந்த தமிழர் கைது

ரஷ்ய ராணுவத்திற்காக தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த இளைஞர்களை கடத்திவந்த 4 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.

உக்ரைன்-ரஷ்யாவுக்கு இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது.  இருநாட்டைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் உயிர்நீத்த நிலையில், இருநாடுகளும் கட்டாய ராணுவ சேர்க்கையில் நாட்டு மக்களை சேர்த்து வருகிறது. அதுமட்டுமின்றி  ரஷ்யாவுக்கு வேலைக்கென அழைத்து செல்லப்பட்டு இந்தியர்கள் வலுக்கட்டாயமாக ராணுவத்தில் சேர்க்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியது. 

இதுபோன்று தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து ரஷ்ய ராணுவத்திற்கு இளைஞர்களை ஏமாற்றி கடத்தி வந்த கன்னியாகுமரியைச் சேர்ந்த நிஜில் ஜோபி பென்சாம், மும்பையைச் சேர்ந்த அந்தோணி மைக்கேல், கேரளாவைச் சேர்ந்த அருண், யேசுதாஸ் ஆகிய 4 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட 4 பேரும் சமூக வலைதளம் மூலம் விளம்பரம் செய்து ரஷ்யாவிற்கு இளைஞர்களை கடத்தி, உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்த ஏஜென்டாக இருந்துள்ளனர். 

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நிஜில் ஜோபி, ரஷ்யாவில் இருந்தபடி கடத்தல் கும்பலின் மூளையாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ சென்னை உட்பட 7 நகரங்களில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow