காற்றில் கலந்த கானக்குயில்.. பின்னணி பாடகி பவதாரிணி மறைவு !
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பிரபல பின்னணி பாடகருமான பவதாரிணி புற்றுநோய் காரணமாக உடல்நலக்குறைவால் நேற்று ( வியாழக்கிழமை ) காலமானார். அவருக்கு வயது 47 ஆகும்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பிரபல பின்னணி பாடகருமான பவதாரிணி புற்றுநோய் காரணமாக உடல்நலக்குறைவால் நேற்று ( வியாழக்கிழமை ) காலமானார். அவருக்கு வயது 47 ஆகும்.
இந்திய சினிமாவின் இசை சக்ரவர்த்தியான இளையராஜாவின் ஒரே மகளும், பிரபல பாடகியுமான பவதாரணி அவர்கள் 47 வயதில் கல்லிரல் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். இவர் 1976 ஆம் ஆண்டு ஜூலை 23-ம் தேதி பிறந்தார். இசையின் வாரிசான பவதாரணி அவர்கள் 8 வயதிலயே பாட தொடங்கிவிட்டார், அந்த பிஞ்சு குரலில் கொஞ்சும் மொழியில் மை டியர் குட்டிச்சாத்தான் என்ற படத்தில் பாடி பின்னணி பாடகியாக அறிமுகமானார். அதன் பிறகு பல திரைப்படங்களில் பின்னணி பாடியுள்ளார். குறிப்பாக பாரதி திரைப்படத்தில் இடம்பெற்ற மயில் போல பொண்ணு ஒண்ணு பாடலுக்காக தேசிய விருது வென்றார்.
அதன் பிறகு ஏ.ஆர்.ரகுமான், யுவன் சங்கர் ராஜா, பரத்வாஜ் உள்ளிட்ட பலரின் இசையிலும் பின்னணி பாடல் பாடியுள்ளார். அழகி படத்தில் இவர் பாடிய ஒளியிலே தெரிவது தேவதையா என்ற பாடல் இவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. இவர் வித்யாசமான குரல் வளம் கொண்டவர். அத்துடன் தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் 10 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இவர் சபரிராஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். மேலும் இவர் ஒரு விளம்பர நிறுவன நிர்வாகி. சென்னை ரோசரி மெட்ரிக் பள்ளியில் பள்ளிபடிப்பை முடித்தவர் பிரபல இசை அமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜாவின் தங்கையும் ஆவார்.
இந்நிலையில் கடந்த சில வருடங்களாக கல்லிரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவருக்கு, அதற்கான சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் இலங்கைக்கு ஆயிர்வேத சிகிச்சைக்காக சென்றவர், சிகிச்சை பலனின்றி திடிரென உயிரிழந்திருக்கிறார் என்பது அனைவருக்கும் அதிர்ச்சியானது. இவரின் மரண செய்தியை கேள்வி பட்டு ஒட்டு மொத்த திரை உலகமும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இசைஞானியின் தாலாட்டை இன்னிசையாக கேட்டு வளர்ந்தவர்கள் கோடி பேர் இருக்கலாம். ஆனால் அந்த இளையராஜாவின் இதயத்தில் சாய்ந்து தாலாட்டை கேட்டு அந்த கான குயில் பவதாரணி, இன்று நம்மை விட்டு பிரிந்து காற்றோடு காற்றாக கலந்து விட்டார்.
மேலும் சோகத்தையும் கீதமாக மாற்றிய வித்தைக்கு சொந்தக்காரர் இளையராஜா அவர்கள்,அவரே இன்று ஆசை மகளை பிரிந்து கண்ணீர் என்னும் காற்றாட்டு வெள்ளத்தில் தத்தலித்து கொண்டு இருக்கிறார், ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லாமல். துக்கம் சில நேரம் பொங்கி வரும் போது, மக்கள் மனம் போல பாடுவேன் கண்ணே.. என் சோகம் என்னோடு தான் என்று திரை பிரபலங்களும் மற்றும் அரசியல் தலைவர்களும் பலரும் X தலத்திலும் சமூகவலைத்தளத்தில் வீடியோ பதிவின் மூலமும் தங்களது அஞ்சலியை பதிவு செய்த வண்ணம் உள்ளனர். இன்று பிற்பகல் 3 மணி அளவில் பாவதாரணியின் உடல் இந்தியாவிற்கு கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?