என்னை மீறி இந்தியர்கள் மீது யாராலும் கை வைக்க முடியாது! – பிரதமர் மோடி எச்சரிக்கை
தமிழ்நாட்டிற்கு 2 நாள் பயணமாக வந்துள்ள பிரதமர் மோடி, திருநெல்வேலியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் இன்று கலந்துக் கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், "தமிழ் மக்கள் எதிர்காலம் பற்றிய மிகத் தெளிவுடன் இருப்பார்கள். இதுதான் தமிழகத்தை பாஜக உடன் இணைக்கிறது. உங்கள் அனைவருக்கும் ஒரு உதாரணம் சொல்கிறேன். தமிழ்நாட்டு சகோதரர்கள் வெளிநாடு செல்லும் போது வெளிநாட்டில் உங்களுக்கு எந்த மரியாதையோடு பார்க்கிறார்கள் என்ற பார்வையில் ஒரு மாற்றம் வந்துள்ளது. இந்தியர்களை அவர்கள் மிக மதிப்போடு பார்க்கிறார்கள். வெளிநாடுகளில் இந்தியர்களை மதிப்போடு பார்க்கிறார்கள் என்றால் மத்திய அரசு அவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்று அர்த்தம்.
முதல்முறையாக டெல்லிக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே இருக்கின்ற தூரம் தற்போது குறைந்துவிட்டது. நாம் மிக நெருக்கமாக வந்து விட்டோம். நம் பாரத தேசம் நூறு மடங்கு முன்னேறினால், தமிழ்நாடு இணையாக நூறு மடங்கு முன்னேற வேண்டும். இது மோடியின் உறுதிமொழி. நாடு எந்த அளவு முன்னேறுகிறதோ, அதேபோல் தமிழ்நாடு முன்னேறும். அதற்காகத்தான் 10 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் எய்ம்ஸ் திறந்ததைப்போல், தமிழ்நாட்டிலும் எய்ம்ஸ் திறக்கிறோம்.
ஒரே குடும்பம், தன்னுடைய குடும்ப வளர்ச்சியே தவிர நம்முடைய மாநில வளர்ச்சியை பார்க்க வில்லை. ஆனால் பாஜக அப்படியில்லை, உங்களை நேசிக்கிறோம் என்பதற்காக தான் உங்கள் குடும்பத்தில் இருந்து ஒரு தலித் குடிமகனை மத்திய அமைச்சராக்கி உள்ளோம். எங்களுக்கு நாடு தான் முக்கியம்… மக்கள் தான் முக்கியம்.. தேசம் தான் முக்கியம்.. ஏனென்றால் இது வலிமையான பாரதம் வல்லமையான பாரதம். அபிநந்தன் பாகிஸ்தான் எல்லையில் விமானத்தில் விழுந்தார் ஒரு கீறல் கூடம் இல்லாமல் அவரை அழைத்து வந்தோமா இல்லையா?
இலங்கையில் 5 மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்திருந்தார்கள். நாங்கள் அவர்களை மீட்டு வந்தோம். யாராலும் நம் நாட்டு மக்கள் மீது கை வைக்க முடியாது. ஏனென்றால் இங்கு இருக்கிறது மோடி.. மோடியை மீறி யாராலும் இந்தியர்கள் மீது கை வைக்க முடியாது. இப்போது உங்கள் மோடியிடம் 10 ஆண்டு ஆட்சி செய்த அனுபவம் இருக்கிறது. அது மட்டுமில்லாமல் அடுத்த ஐந்து ஆண்டிற்கு என்ன செய்யப் போகிறோம் என்பதில் உறுதியான திட்டங்கள் இருக்கிறது. நாம் மூன்றாம் முறை ஆட்சிக்கு வரும்போது பொருளாதாரத்தில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் தொழில் வளம் மிக வேகமாக விரிவுபடுத்தப்படும்" என்று கூறினார்.
மேலும் படிக்க :
https://kumudam.com/There-will-be-no-more-DMK-in-Tamil-Nadu...-PM-Modi-vows
What's Your Reaction?