மக்களவைத் தொகுதி வாரியாக வாக்கு சதவீத நிலவரம்.. எங்கு அதிகம்? எங்கு குறைவு? முழு விவரம்..

Apr 19, 2024 - 20:22
மக்களவைத் தொகுதி வாரியாக வாக்கு சதவீத நிலவரம்.. எங்கு அதிகம்? எங்கு குறைவு? முழு விவரம்..

தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் வாக்கு சதவீதம் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி தொகுதியிலும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியிலும் பதிவாகியுள்ளது.

18-வது மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இன்று (19-04-2024) முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. 

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. 6 மணிக்கு முன் வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைத்த அதிகாரிகள், அதனை வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு சென்றனர்.

தமிழ்நாட்டில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் 75.67% வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் 67.35% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

இரவு 7 மணி நிலவரப்படி மக்களவைத் தொகுதி வாரியாக வாக்கு சதவீத நிலவரம்:

1.    கள்ளக்குறிச்சி  75.67%
2.    தருமபுரி  75.44%
3.    சிதம்பரம்  74.87%
4.    பெரம்பலூர்  74.46%
5.    நாமக்கல்  74.29%
6.    கரூர்  74.05%
7.    அரக்கோணம்  73.92%
8.    ஆரணி  73.77%
9.    சேலம்  73.55%
10.    விழுப்புரம்  73.49%
11.    திருவண்ணாமலை  73.35%
12.    வேலூர்  73.04%
13.    காஞ்சிபுரம்  72.99%
14.    கிருஷ்ணகிரி  72.96%
15.    கடலூர்  72.40%
16.    விருதுநகர்  72.29%
17.    பொள்ளாச்சி  72.22%
18.    நாகப்பட்டினம்  72.21%
19.    திருப்பூர்  72.02%
20.    திருவள்ளூர்  71.87%
21.    தேனி  71.74%
22.    மயிலாடுதுறை  71.45%
23.    ஈரோடு  71.42%
24.    திண்டுக்கல்  71.37%
25.    திருச்சி  71.20%
26.    கோவை  71.17%
27.    நீலகிரி  71.07%
28.    தென்காசி  71.06%
29.    சிவகங்கை  71.05%
30.    ராமநாதபுரம்  71.05%
31.    தூத்துக்குடி  70.93%
32.    திருநெல்வேலி  70.46%
33.    கன்னியாகுமரி  70.15%
34.    தஞ்சாவூர்  69.82%
35.    ஸ்ரீபெரும்புதூர்  69.79%
36.    வடசென்னை  69.26%
37.    மதுரை  68.98%
38.    தென்சென்னை  67.82%
39.    மத்திய சென்னை  67.35%

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow