பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு, ஞாயிற்றுக்கிழமை பெட்ரோல் பங்க் விடுமுறை?
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகளை விடுமுறை அளிப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
அமெரிக்காவுடனான போர் பதற்றம் காரணமாக ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடியுள்ளதால், இந்தியா மட்டுமில்ல உலக நாடுகள் கச்சா எண்ணெய் கொண்டு வருவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இதனால் பெட்ரோல்-டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்த்தப்பட்டுள்ளது. சில நாடுகளில் லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பெட்ரோல்-டீசல் பயன்பாட்டை குறைக்க பொதுமக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும். வாகனங்களில் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் குழுவாக இணைந்து பயணிக்க வேண்டும் என பிரதமர் மோடி என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
15 நாட்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளதாக தெரிகிறது. இதனால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பெட்ரோல் பங்க்குகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக பெட்ரோலிய டீலர்கள் சங்க செயற்குழு ஆலோசித்து வருகின்றனர். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மராட்டியம், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் அரியானாவில் முதற்கட்டமாக ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படும் எனவும் தெரிகிறது.
இப்படி தகவல் பரவி வரும் நிலையில், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நேற்றைய தினம் பெட்ரோல், டீசல் விலை தலா ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் பங்குகள் விடுமுறை அளிக்கப்பட உள்ளது தொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், 'ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க்குகள் மூடப்படும் என்று பரவும் தகவல் தவறானது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?