"தமிழ்நாட்டில்தான் பெட்ரோல் அதிக விலைக்கு விக்குது..." அண்ணாமலையின் அதிரடி குற்றச்சாட்டு!
வரும் மக்களவைத் தோ்தலில் தமிழ்நாட்டில் பாஜக 33 சதவீதத்துக்குமேல் வாக்குகளைப் பெறும்
கோவை மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் நிகழ்ந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக ஆளாத மாநிலங்களிலேயே தமிழ்நாட்டில்தான் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருப்பதாகக் குற்றம்சாட்டினார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் 'என் மண், என் மக்கள் நடைபயணம்' இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த பிப்ரவரி 22-ம் தேதி கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டார்.அதில், மத்திய இணை அமைச்சர்கள் ராஜீவ் சந்திரசேகர், எல்.முருகன், பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நடைபயணத்தைத் தொடர்ந்து வி.கே.கே.மேனன் சாலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், பேசிய அண்ணாமலை, என் மண் என் மக்கள் நடைபயணம், திருப்பூா் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள மாதப்பூரில் பிப்ரவரி 27ம் தேதி நிறைவுபெறும் என தெரிவித்தார். இதில், பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்பதாகவும், 2021-ஆம் ஆண்டுக்குப் பிறகு மாதப்பூரில்தான் பிரதமா் அரசியல் பேசப் போகிறாா் எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.
வரும் மக்களவைத் தோ்தலில் தமிழ்நாட்டில் பாஜக 33 சதவீதத்துக்குமேல் வாக்குகளைப் பெறும் எனக் கூறிய அவர், பிரதமா் மோடி மூன்றாவது முறையாக பிரதமராவாா் என்று தெரிவித்தார். மேலும், பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைவாகவே உள்ளது என்று கூறிய அண்ணாமலை, தமிழ்நாட்டில்தான் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
What's Your Reaction?