புழல் ஏரியில் செத்து மிதக்கும் பன்றி, நாய், மாடுகள்

ஆவடி மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இணைந்து சுத்திகரிப்பு நிலையம் மற்றும் ஏரியின் சுற்றுப்புறங்களில் கொட்டக்கூடிய குப்பைகளால் அசுத்தமாவதையும் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Dec 11, 2023 - 12:34
Dec 11, 2023 - 15:21
புழல் ஏரியில் செத்து மிதக்கும்  பன்றி, நாய், மாடுகள்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரியாக உள்ள புழல் ஏரியில் பன்றி, நாய், மாடு செத்து மிதக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் வெங்கடாசலம் நகர் பகுதியில் தொடர்ந்து, புழல் ஏரியின் கரை ஓரமாக குப்பைகள் கொட்டுவதாகவும், இறந்த மாடுகள், பன்றிகள், நாய்களின் சடலங்கள், கோழி இறைச்சி கழிவுகள்  ஆகியவை ஏரியின் நீரினுள் வீசப்படுகிறது.இதனால் ஏரியின் குடிநீர் தூய்மை தன்மை மாசுபடுவதாக ஏரி பாதுகாப்பு இயக்கம் புகார் தெரிவிக்கின்றனர்.

சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய பிரதான ஏரியான புழல் ஏரி சுமார் 4500 ஏக்கர் பரப்பளவு மற்றும் 3300 கனஅடி நீர் கொள்ளளவு கொண்டது. இந்த ஏரி கரையை சுற்றி பல ஊர்கள் உள்ளன.இதில் திருமுல்லைவாயல் வெங்கடாசலம் நகர் பகுதியில் தொடர்ந்து ஏரிக்கரையின் ஓரங்களில் குப்பைகளும் இறந்த மாடு, பன்றி, நாய் கோழி இறைச்சி கழிவுகள் ஆகிய சடலங்களை ஏரி நீரில் வீசப்படுவதால் ஏரியின் தூய்மை தன்மை மாசுபடுகிறது.

மேலும் மாநகராட்சி தரப்பில் குப்பைகள் கொட்டுவதற்கான குப்பை தொட்டிகள் வைக்காமலும், இதனால் திருமுல்லைவாயல் சுற்றுப்பகுதியில் உள்ள கழிவுநீர் அனைத்தும்  ஏரியில் கலப்பதால் நீரின் தன்னை மாசுபடுகிறது.இந்த நீரையே சென்னை மக்கள் குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். 

அதேபோல் மாநகராட்சி தரப்பில் கால்வாய் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு இதுவரை செயல்படாமலே கால்வாய் நீர் அனைத்தும் ஏரியில் சேர்கிறது. எனவே ஆவடி மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இணைந்து சுத்திகரிப்பு நிலையம் மற்றும் ஏரியின் சுற்றுப்புறங்களில் கொட்டக்கூடிய குப்பைகளால் அசுத்தமாவதையும் தடுத்து இந்த ஏரியை பாதுகாக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக வைத்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow