கராத்தே போட்டியில் பதக்கங்கள் குவிப்பு-தஞ்சை வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு
கராத்தே-வை பள்ளிகளில் கட்டாய பாடமாக்க வேண்டும் என கோரிக்கை
டெல்லியில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழ்நாடு அணியில் பங்கேற்று பதக்கங்கள் குவித்து தஞ்சை வந்த வீரர், வீராங்கனைகளுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
டெல்லி டல்கோத்ரா உள் விளையாட்டு அரங்கில் கடந்த 28, 29 ஆகிய இரண்டு நாட்கள் தேசிய அளவிலான கராத்தே போட்டி நடைப்பெற்றது.இப்போட்டியில் தமிழ்நாடு அணியில் தஞ்சையை சேர்ந்த 25 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.இப்போட்டியில், தஞ்சையில் இருந்து சென்ற வீரர், வீராங்களைகள் 8 தங்கம், 8 வெள்ளி, 4 வெண்கல பதக்கங்களை வென்றனர்
தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று பதக்கங்கள் வென்று ரயில் மூலம் தஞ்சைக்கு வந்த வீரர், வீராங்கனைகளுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.பயிற்சியாளர்கள், வீரர், வீராங்கனைகளுக்கு ரோஜாப்பூ மாலை அணிவித்து வரவேற்றனர். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை கராத்தே வை கட்டாய பாடமாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு கராத்தே கூட்டமைப்பின் தலைவர் அன்பரசன் கோரிக்கை வைத்தார்.
What's Your Reaction?