தஞ்சாவூர்:மதுபான கடையின் பூட்டை உடைத்து கொள்ளை

கடையின் மேற்பார்வையாளர் வந்து பிறகு தான் கடையில் எவ்வளவு கொள்ளை நடந்துள்ளது என்று விவரங்கள் தெரியவரும்

Dec 11, 2023 - 12:03
Dec 11, 2023 - 15:20
தஞ்சாவூர்:மதுபான கடையின் பூட்டை உடைத்து கொள்ளை

தஞ்சாவூர் அருகே மதுபான கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் பள்ளியஅக்ரஹாரம் புறவழிச்சாலையில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இக்கடையில் நேற்று இரவு மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்தும், கண்காணிப்பு கேமராக்களை உடைத்து மதுபாட்டில்கள் மற்றும் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இன்று காலை வயலுக்கு வேலைக்கு சென்றவர்கள் பார்த்துவிட்டு நடுக்காவேரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவலின் பெயரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடையின் மேற்பார்வையாளர் வந்து பிறகு தான் கடையில் எவ்வளவு கொள்ளை நடந்துள்ளது என்று விவரங்கள் தெரியவரும்.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow